ஹதீஸ்கள்
#3430
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophets
மாலிக் பின் ஸஅஸஆ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் அவர்கள் (விண் பயணத்திற்காக) அழைத்துச் செல்லப்பட்ட இரவைக் குறித்துப் பேசிக்கொண்டிருந்தபோது சொன்னார்கள்: ...பிறகு (வானவர்) ஜிப்ரீல் அவர்கள் ஏறிச் சென்று இரண்டாம் வானத்தை அடைந்தார். அதன் வாயிலைத் திறக்கச் சொன்னார். ‘‘யார் அது?” என்ற கேட்கப்பட்டது. ஜிப்ரீல் (அலை) அவர்கள், ‘‘ஜிப்ரீல்” என்று பதிலளித்தார். ‘‘உங்களுடன் இருப்பவர் யார்” என்று கேட்கப் பட்டது. அதற்கு அவர், ‘‘முஹம்மத்” என்று பதிலளித்தார். ‘‘அவரை அழைத்து வர ஆள் அனுப்பப்பட்டிருந்ததா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘‘ஆம்” என்று பதில் சொன்னார். நான் அங்கு சென்று சேர்ந்தபோது அங்கு யஹ்யா (அலை) மற்றும் ஈசா (அலை) ஆகியோர் இருந்தனர். அவர்கள் இருவரும் ஒன்றுவிட்ட சகோதரர்கள். (ஒருவருக்கொருவர் சின்னம்மா பெரியம்மா மகன்கள்.) ஜிப்ரீல் (அலை) அவர்கள், ‘‘இது யஹ்யாவும் ஈசாவும் ஆவர். இருவருக்கும் சலாம் சொல்லுங்கள்’ என்று கூறினார். அவ்வாறே நான் சலாம் சொன்னேன். அவர்கள் இருவரும் சலாமுக்குப் பதிலுரைத்தார்கள். பிறகு, ‘‘நல்ல சகோதரரே! நல்ல நபியே! வருக!” என்று கூறி (வாழ்த்தி)னார்கள்.113 அத்தியாயம் :
حدثنا هدبة بن خالد، حدثنا همام بن يحيى، حدثنا قتادة، عن انس بن مالك، عن مالك بن صعصعة، ان نبي الله صلى الله عليه وسلم حدثهم عن ليلة اسري " ثم صعد حتى اتى السماء الثانية فاستفتح، قيل من هذا قال جبريل. قيل ومن معك قال محمد. قيل وقد ارسل اليه قال نعم. فلما خلصت، فاذا يحيى وعيسى وهما ابنا خالة. قال هذا يحيى وعيسى فسلم عليهما. فسلمت فردا ثم قالا مرحبا بالاخ الصالح والنبي الصالح
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophets
- Hadith Index
- #3430
- Book Index
- 101
Grades
- -
