ஹதீஸ்கள்
#3418
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophets
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! ஆயுள் முழுவதும் பகலில் நோன்பு நோற்று இரவில் நின்று வழிபடுவேன்” என்று நான் கூறுவதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், ‘‘நீங்கள்தான் ‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஆயுள் முழுவதும் பகலில் நோன்பு நோற்று இரவில் நின்று வழிபடுவேன்’ என்று கூறுகிறீர்களா?” என்று கேட்டார்கள். ‘‘நான் அப்படிச் சொல்லத்தான் செய்தேன்” என்று பதிலளித்தேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘உங்களால் அது முடியாது. ஆகவே, (சிலசமயம்) நோன்பு வையுங்கள். (சிலசமயம்) நோன்பை விடுங்கள். (இரவில்) நின்று வழிபடுங்கள்; தூங்கவும் செய்யுங்கள். மாதத்தில் மூன்று நாட்கள் நோன்புவையுங்கள். ஏனெனில், ஒரு நற்செயலுக்கு அதைப் போன்று பத்து மடங்கு பிரதிபலன் அளிக்கப்படும். அதுவே காலம் முழுவதும் நோன்பு வைத்ததாகும்” என்று கூறினார்கள். நான், ‘‘இதைவிட அதிக நாள் நோன்பு நோற்பதற்கு எனக்குச் சக்தி உண்டு அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினேன். அதற்கு அவர்கள், ‘‘அப்படியென்றால் ஒருநாள் நோன்பு நோற்று இரண்டு நாட்கள் நோன்பை விட்டுவிடுங்கள்” என்று சொன்னார்கள். நான், ‘‘அதைவிட அதிகத்திற்கு எனக்குச் சக்தியுண்டு, அல்லாஹ்வின் தூதரே!” என்று சொன் னேன். அதற்கு அவர்கள், ‘‘அப்படி யென்றால், ஒருநாள் நோன்பு நோற்று ஒரு நாள் நோன்பை விட்டுவிடுங்கள். அது தான் (நபி) தாவூதின் நோன்பாகும்; அதுதான் நடுநிலையானதாகும்” என்று கூறினார்கள். நான், ‘‘அதைவிடச் சிறந்ததற்கு எனக்குச் சக்தி உண்டு, அல்லாஹ்வின் தூதரே!” என்று சொன்னேன். அதற்கு அவர்கள், ‘‘அதைவிடச் சிறந்ததே இல்லை” என்று கூறினார்கள்.96 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا يحيى بن بكير، حدثنا الليث، عن عقيل، عن ابن شهاب، ان سعيد بن المسيب، اخبره وابا، سلمة بن عبد الرحمن ان عبد الله بن عمرو رضى الله عنهما قال اخبر رسول الله صلى الله عليه وسلم اني اقول والله لاصومن النهار ولاقومن الليل ما عشت. فقال له رسول الله صلى الله عليه وسلم " انت الذي تقول والله لاصومن النهار ولاقومن الليل ما عشت " قلت قد قلته. قال " انك لا تستطيع ذلك، فصم وافطر، وقم ونم، وصم من الشهر ثلاثة ايام، فان الحسنة بعشر امثالها، وذلك مثل صيام الدهر ". فقلت اني اطيق افضل من ذلك يا رسول الله. قال " فصم يوما وافطر يومين ". قال قلت اني اطيق افضل من ذلك. قال " فصم يوما وافطر يوما، وذلك صيام داود، وهو عدل الصيام ". قلت اني اطيق افضل منه يا رسول الله. قال " لا افضل من ذلك
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophets
- Hadith Index
- #3418
- Book Index
- 90
Grades
- -
