ஹதீஸ்கள்
#3383
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophets
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ‘‘மனிதர்களில் மிகவும் கண்ணியத்திற்குரியவர் யார்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘‘மனிதர்களில் அல்லாஹ்வுக்கு அதிகமாக அஞ்சுபவர்தான்” என்று பதிலளித்தார்கள். மக்கள், ‘‘இதைப் பற்றி உங்களிடம் நாங்கள் கேட்கவில்லை” என்று கூறினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘அப்படி யென்றால் மக்களிலேயே மிகவும் கண்ணியத்திற்குரியவர் அல்லாஹ்வின் உற்ற நண்பர் (இப்ராஹீம்) உடைய மகனான அல்லாஹ்வின் தூதர் (இஸ்ஹாக்) உடைய மகனான அல்லாஹ்வின் தூதர் (யஅகூப்) உடைய மகனான அல்லாஹ்வின் தூதர் யூசுஃப் (அலை) அவர்கள்தான்” என்று கூறினார்கள். மக்கள், ‘‘நாங்கள் இதைப் பற்றியும் உங்களிடம் கேட்கவில்லை” என்று கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘அப்படியென்றால், அரபியரின் மூலகங்கள் (எனப்படும் அரபியரின் பரம்பரை) பற்றி நீங்கள் என்னிடம் கேட்கிறீர்களா? மக்கள் மூலகங்கள் ஆவர். அறியாமைக் காலத்தில் அவர்களில் சிறந்தவர்களாயிருந்தவர்கள் இஸ்லாத்தைத் தழுவிவிடும்போதும் சிறந்தவர்களாயிருப்பார்கள்; அவர்கள் மார்க்க ஞானத்தைப் பெற்றுக்கொண்டால்” என்று பதிலளித்தார்கள்.58 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثني عبيد بن اسماعيل، عن ابي اسامة، عن عبيد الله، قال اخبرني سعيد بن ابي سعيد، عن ابي هريرة رضى الله عنه سيل رسول الله صلى الله عليه وسلم من اكرم الناس قال " اتقاهم لله ". قالوا ليس عن هذا نسالك. قال " فاكرم الناس يوسف نبي الله ابن نبي الله ابن نبي الله ابن خليل الله ". قالوا ليس عن هذا نسالك. قال " فعن معادن العرب تسالوني، الناس معادن خيارهم في الجاهلية خيارهم في الاسلام اذا فقهوا ". حدثني محمد بن سلام اخبرنا عبدة عن عبيد الله عن سعيد عن ابي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم بهذا
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophets
- Hadith Index
- #3383
- Book Index
- 57
Grades
- -
