ஹதீஸ்கள்
#3339
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophets
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறுமையில் நூஹ் அவர்களும் அவர்களின் சமுதாயத்தாரும் வருவார்கள். அப்போது அல்லாஹ் (நூஹ் (அலை) அவர்களை நோக்கி), ‘‘(எனது செய்தியை நீங்கள் உங்கள் சமுதாயத்தாருக்கு) எடுத்துரைத்துவிட்டீர்களா?” என்று கேட்பான். அதற்கு நூஹ் அவர்கள், ‘‘ஆம், என் இறைவா! (எடுத்துரைத்து விட்டேன்)” என்று பதிலளிப்பார்கள். பிறகு அல்லாஹ் நூஹ் அவர்களுடைய சமுதாயத்தாரிடம், ‘‘இவர் உங்களுக்கு (என் செய்தியை) எடுத்துரைத்துவிட்டாரா?” என்று கேட்பான். அதற்கு அவர்கள், ‘‘இல்லை. எங்களிடம் எந்த இறைத்தூதரும் வரவில்லை” என்று பதில் கூறுவார்கள். அப்போது அல்லாஹ் நூஹ் அவர்களிடம், ‘‘உங்களுக்காகச் சாட்சியம் சொல்பவர் யார்?” என்று கேட்பான். நூஹ் அவர்கள், ‘‘முஹம்மத் (ஸல்) அவர்களும் அவர்களுடைய சமுதாயத்தாரும் (எனக்காகச் சாட்சியம் சொல்வார்கள்)” என்று பதிலளிப்பார்கள். அவ்வாறே நாம் நூஹ் அவர்கள் (இறைச் செய்தியைத் தம் சமுதாயத்தாருக்கு) எடுத்துரைத்துவிட்டார்கள் என்று சாட்சியம் சொல்வோம். ‘‘அவ்வாறே உங்களை மக்களுக்குச் சாட்சியம் சொல்வதற்காக நடுநிலையான சமுதாயமாக ஆக்கினோம்” (2:143) எனும் புகழோங்கிய இறைவனின் வசனம் இதைத் தான் குறிக்கின்றது. யிநடுநிலையா” (வசத்) எனும் சொல் லின் கருத்து ‘நீதியா” என்பதாகும். இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا موسى بن اسماعيل، حدثنا عبد الواحد بن زياد، حدثنا الاعمش، عن ابي صالح، عن ابي سعيد، قال قال رسول الله صلى الله عليه وسلم " يجيء نوح وامته فيقول الله تعالى هل بلغت فيقول نعم، اى رب. فيقول لامته هل بلغكم فيقولون لا، ما جاءنا من نبي. فيقول لنوح من يشهد لك فيقول محمد صلى الله عليه وسلم وامته، فنشهد انه قد بلغ، وهو قوله جل ذكره {وكذلك جعلناكم امة وسطا لتكونوا شهداء على الناس} والوسط العدل
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophets
- Hadith Index
- #3339
- Book Index
- 14
Grades
- -
