ஹதீஸ்கள்
#3332
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophets
உண்மையே பேசுபவரும், உண்மையே அறிவிக்கப்பட்டவருமான அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் உங்கள் தாயின் வயிற்றில் நாற்பது நாட்கள் (கருவாக) சேமிக்கப்படு கிறீர்கள். பிறகு அவ்வாறே (நாற்பது நாட்களில்) அந்தக் கரு (அட்டை போன்று கருப்பையின் சுவரைப் பற்றிப் பிடித்துத் தொங்கும்) ஒரு கருக் கட்டியாக மாறிவிடுகிறது. பிறகு, அவ்வாறே (இன்னொரு நாற்பது நாட்களில் மெல்லப்பட்ட சக்கை போன்ற) ஒரு சதைப்பிண்டமாக மாறிவிடுகிறது. பிறகு, அல்லாஹ் அதனி டம் ஒரு வானவரை நான்கு கட்டளை களைத் தந்து அனுப்புகிறான். (அதன்படி) அதன் செயல்பாடு (எப்படியிருக்கும் என்று)ம் அதன் ஆயுளும், அதன் உணவும் (பிற வாழ்வாதாரங்களும் எவ்வளவு என்றும்) எழுதப்படுகின்றன. அக்குழந்தை நற்பேறற்றதா, நற்பேறுள்ளதா என்பதும் எழுதப்படுகிறது. பிறகு அதனுள் உயிர் ஊதப்படுகிறது. இதனால்தான், மனிதன் நரகவாசி களின் செயலைச் செய்தவண்ண மிருப்பான். இறுதியில், அவனுக்கும் நரகத்திற்குமிடையே ஒரு முழம் மட்டும் தான் இடைவெளி இருக்கும். அப்போது (எதிர்பாராத விதமாக) விதி அவனை முந்திக்கொள்ள, அவன் சொர்க்கவாசிகளின் செயலைச் செய்து சொர்க்கத்தில் நுழைந்துவிடுவான். ஒரு மனிதன் சொர்க்கவாசிகளின் செயலைச் செய்தவண்ணமிருப்பான். இறுதியில் அவனுக்கும் சொர்க்கத்திற்கு மிடையே ஒரு முழம்தான் இருக்கும். அப்போது, (எதிர்பாராத விதமாக) விதி அவனை முந்திக்கொள்ள அவன் நரக வாசிகளின் செயலைச் செய்து நரகத்தில் புகுந்துவிடுவான். இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.6 அத்தியாயம் :
حدثنا عمر بن حفص، حدثنا ابي، حدثنا الاعمش، حدثنا زيد بن وهب، حدثنا عبد الله، حدثنا رسول الله صلى الله عليه وسلم وهو الصادق المصدوق " ان احدكم يجمع في بطن امه اربعين يوما، ثم يكون علقة مثل ذلك، ثم يكون مضغة مثل ذلك، ثم يبعث الله اليه ملكا باربع كلمات، فيكتب عمله واجله ورزقه وشقي او سعيد، ثم ينفخ فيه الروح، فان الرجل ليعمل بعمل اهل النار حتى ما يكون بينه وبينها الا ذراع، فيسبق عليه الكتاب فيعمل بعمل اهل الجنة، فيدخل الجنة، وان الرجل ليعمل بعمل اهل الجنة، حتى ما يكون بينه وبينها الا ذراع فيسبق عليه الكتاب، فيعمل بعمل اهل النار فيدخل النار
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophets
- Hadith Index
- #3332
- Book Index
- 7
Grades
- -
