ஹதீஸ்கள்
#3293
ஸஹீஹ் அல்-புகாரீ - Beginning of Creation
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார், ‘‘லா இலாஹ இல்லல்லாஹ், வஹ்தஹு லா ஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு வ லஹுல் ஹம்து, வ ஹுவ அலா குல்லி ஷய்இன் கதீர்” (பொருள்: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை; அவன் தனித்தவன். அவனுக்கு இணை(துணை) கிடையாது. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கே புகழ் அனைத்தும் உரியன. அவன் எல்லாவற்றின் மீதும் ஆற்றல் மிக்கவன்) என்று ஒரு நாளில் நூறு முறை சொல்கிறாரோ அவருக்கு, அது பத்து அடிமைகளை விடுதலை செய்வதற்குச் சமமா(ன நற்பலன் பெற்றுக் கொடுப்பதா)கும். மேலும், அவருக்கு நூறு நன்மைகள் எழுதப்படும். அவரைவிட்டு (அவர் புரிந்த) நூறு தீமைகள் அழிக்கப்படும். அவருடைய அந்த நாளில் மாலை நேரம் வரும்வரை ஷைத்தானிடமிருந்து (பாது காக்கும்) அரணாக அது அவருக் கிருக்கும். மேலும், அவர் புரிந்த சிறந்த நற் செயலை எவரும் செய்ய முடியாது; ஒருவர் இதைவிட அதிகமான (தடவைகள் இதை ஓதினால் அல்லது மிக முக்கியமான) ஒரு நற்செயல் புரிந்தால் தவிர. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، اخبرنا مالك، عن سمى، مولى ابي بكر عن ابي صالح، عن ابي هريرة رضى الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال " من قال لا اله الا الله وحده لا شريك له، له الملك، وله الحمد، وهو على كل شىء قدير. في يوم ماية مرة، كانت له عدل عشر رقاب، وكتبت له ماية حسنة، ومحيت عنه ماية سيية، وكانت له حرزا من الشيطان يومه ذلك حتى يمسي، ولم يات احد بافضل مما جاء به، الا احد عمل اكثر من ذلك
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Beginning of Creation
- Hadith Index
- #3293
- Book Index
- 102
Grades
- -
