ஹதீஸ்கள்
#3285
ஸஹீஹ் அல்-புகாரீ - Beginning of Creation
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: தொழுகைக்காக (பாங்கு சொல்லி) அழைக்கப்படும்போது ஷைத்தான் சத்தத் துடன் காற்றை விட்டுக்கொண்டு திரும்பி ஓடிவிடுகிறான். பாங்கு சொல்லி முடித்ததும் திரும்பி வருகிறான். தொழுகைக்கு யிஇகாமத்’ சொல்லப்பட்டால் திரும்பி ஓடி விடுகிறான். யிஇகாமத்’ சொல்லி முடித்த தும் திரும்பிவருகிறான். (தொழுகையில் ஈடுபட்டுள்ள) மனிதனின் உள்ளத்தில் ஊடுருவி ஊசலாட்டத்தை ஏற்படுத்தி, ‘‘இப்படி இப்படியெல்லாம் நினைத்துப்பார்” என்று கூறுகிறான். (அதன் விளைவாக) தொழுகையாளிக்கு நாம் மூன்று ரக்அத்கள் தொழுதோமா, நான்கு ரக்அத்கள் தொழுதோமா என்று தெரியாமல் போய்விடுகிறது. மூன்று ரக்அத்கள் தொழுதோமா, நான்கு ரக்அத்துக்கள் தொழுதோமா என்று தொழுகையாளிக்குத் தெரியாமல் போய்விட்டால், அவர் (மறதிக்குப் பரிகாரமாக) சஹ்வுடைய இரண்டு சஜ்தாக்கள் செய்ய வேண்டும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.89 அத்தியாயம் :
حدثنا محمد بن يوسف، حدثنا الاوزاعي، عن يحيى بن ابي كثير، عن ابي سلمة، عن ابي هريرة رضى الله عنه قال قال النبي صلى الله عليه وسلم " اذا نودي بالصلاة ادبر الشيطان وله ضراط، فاذا قضي اقبل، فاذا ثوب بها ادبر، فاذا قضي اقبل، حتى يخطر بين الانسان وقلبه، فيقول اذكر كذا وكذا. حتى لا يدري اثلاثا صلى ام اربعا فاذا لم يدر ثلاثا صلى او اربعا سجد سجدتى السهو
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Beginning of Creation
- Hadith Index
- #3285
- Book Index
- 94
Grades
- -
