ஹதீஸ்கள்
#3282
ஸஹீஹ் அல்-புகாரீ - Beginning of Creation
சுலைமான் பின் ஸுரத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்துகொண்டிருந்தேன். அப்போது இரண்டு மனிதர்கள் ஒருவரையொருவர் ஏசிக்கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவரின் முகம் (கோபத்தால்) சிவந்துவிட்டது. அவரது கழுத்து நரம்புகள் புடைத்துவிட்டன. அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘எனக்கு ஒரு (பிரார்த்தனை) வார்த்தை தெரியும். அதை இவர் சொல்வாராயின் இவருக்கு ஏற்பட்டுள்ள கோபம் போய்விடும், யிஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்’ (அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தான்) என்று இவர் பிரார்த்தித்தால் இவருக்கு ஏற் பட்டுள்ள கோபம் போய்விடும்” என்று கூறினார்கள். ஆகவே, மக்கள் அந்த மனிதரிடம், ‘‘நபி (ஸல்) அவர்கள், யிஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக்கோருவீராக!› என்று கூறினார்கள்” எனத் தெரிவித்தார்கள். அதற்கு அவர், ‘‘எனக்குப் பைத்தியமா பிடித்திருக்கிறது?” என்று கேட்டார்.86 அத்தியாயம் :
حدثنا عبدان، عن ابي حمزة، عن الاعمش، عن عدي بن ثابت، عن سليمان بن صرد، قال كنت جالسا مع النبي صلى الله عليه وسلم ورجلان يستبان، فاحدهما احمر وجهه وانتفخت اوداجه، فقال النبي صلى الله عليه وسلم " اني لاعلم كلمة لو قالها ذهب عنه ما يجد، لو قال اعوذ بالله من الشيطان. ذهب عنه ما يجد ". فقالوا له ان النبي صلى الله عليه وسلم قال " تعوذ بالله من الشيطان ". فقال وهل بي جنون
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Beginning of Creation
- Hadith Index
- #3282
- Book Index
- 91
Grades
- -
