ஹதீஸ்கள்
#3280
ஸஹீஹ் அல்-புகாரீ - Beginning of Creation
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: ‘‘இரவின் இருள் படரத் தொடங்கி விட்டால் உங்கள் குழந்தைகளை (வெளியே திரிய விடாமல்) தடுத்து விடுங்கள். ஏனெனில், ஷைத்தான்கள் அப்போதுதான் (பூமியெங்கும்) பரவி விடுகின்றன. இரவு வேளையில் சிறிது நேரம் கழிந்துவிட்டால் அவர்களை (வெளியே செல்ல) விட்டுவிடுங்கள்.82 மேலும், (இரவில்) உன் கதவை மூடிவிடுவீராக! (அப்போது) அல்லாஹ்வின் பெயரைச் சொல்வீராக! (உறங்கச் செல்கை யில்) உமது விளக்கை அணைத்து விடுவீராக! (அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைச் சொல்வீராக!. உமது தண்ணீர் பையைச் சுருக்கிட்டு மூடிவிடுவீராக! (அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைச் சொல்வீராக! உமது பாத்திரத்தை மூடி வைப்பீராக! (அதை முழுவதும் மூட இயலாவிட்டாலும்) அதன்மீது எதையாவது குறுக்காக வைத்தேனும் மூடிவிடுவீராக! (அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைச் சொல்வீராக! இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.83 அத்தியாயம் :
حدثنا يحيى بن جعفر، حدثنا محمد بن عبد الله الانصاري، حدثنا ابن جريج، قال اخبرني عطاء، عن جابر رضى الله عنه عن النبي صلى الله عليه وسلم قال " اذا استجنح {الليل} او كان جنح الليل فكفوا صبيانكم، فان الشياطين تنتشر حينيذ، فاذا ذهب ساعة من العشاء فحلوهم واغلق بابك، واذكر اسم الله، واطفي مصباحك، واذكر اسم الله، واوك سقاءك، واذكر اسم الله، وخمر اناءك، واذكر اسم الله، ولو تعرض عليه شييا
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Beginning of Creation
- Hadith Index
- #3280
- Book Index
- 89
Grades
- -
