ஹதீஸ்கள்
#3268
ஸஹீஹ் அல்-புகாரீ - Beginning of Creation
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டது. எந்த அளவுக்கென்றால் அவர்கள் ஒரு செயலைச் செய்யாமலிருக்க, அதைச் செய்ததைப் போன்று அவர்களுக்கு பிரமையூட்டப்பட்டது. இறுதியில் ஒருநாள், அவர்கள் பிரார்த்தனை செய்தவண்ணமிருந்தார்கள். பிறகு சொன்னார்கள்: ‘‘என்(மீது செய்யப்பட்டுள்ள சூனியத்திற்கான) நிவாரணம் எதில் உள்ளதோ அதை எனக்கு அல்லாஹ் அறிவித்துவிட்டதை நீ அறிவாயா? என்னிடம் (கனவில்) இரண்டு பேர் (இரு வானவர்களான ஜிப்ரீலும் மீக்காயிலும்) வந்தனர். அவர்களில் ஒருவர் (ஜிப்ரீல்) என் தலைமாட்டில் அமர்ந்தார். மற்றொருவர் (மீக்காயீல்) எனது கால்மாட்டில் அமர்ந்தார். ஒருவர் மற்றொருவரிடம் (மீக்காயீல் ஜிப்ரீலிடம்), ‘‘இந்த மனிதரைப் பீடித்துள்ள நோய் என்ன?” என்று கேட்டார். மற்றொருவர் (ஜிப்ரீல்), ‘‘இவருக்குச் சூனியம் வைக்கப்பட்டுள்ளது” என்று பதிலளித்தார். அதற்கு அவர், ‘‘இவருக்குச் சூனியம் வைத்தவர் யார்?” என்று கேட்க, (ஜிப்ரீல்) அவர்கள், ‘‘லபீத் பின் அஃஸம் (என்னும் யூதன்)” என்று பதிலளித்தார். ‘‘(அவன் சூனியம் வைத்தது) எதில்?” என்று அவர் (மீக்காயீல்) கேட்க அதற்கு, ‘‘சீப்பிலும், (இவரது) முடியிலும், ஆண் (பேரீச்சம்) பாளையின் உறையிலும்” என்று (ஜிப்ரீல்) பதிலளித்தார். அதற்கு அவர், ‘‘அது எங்கே இருக்கிறது?” என்று கேட்க, ‘‘(பனூ ஸுரைக் குலத்தாரின் தோட்டத்திலுள்ள) யிதர்வான்’ எனும் கிணற்றில்” என்று பதிலளித்தார். (இதைச் சொல்லி முடித்த)பிறகு, நபி (ஸல்) அவர்கள் அந்தக் கிணற்றை நோக்கிப் புறப்பட்டார்கள்; பிறகு திரும்பி வந்தார்கள். திரும்பி வந்தபோது என்னிடம், ‘‘அந்தக் கிணற்றிலிருக்கும் பேரீச்ச மரங்கள் ஷைத்தான்களின் தலைகளைப் போல் உள்ள”’ என்று கூறினார்கள். நான், ‘‘அதைத் தாங்கள் வெளியே எடுத்தீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘இல்லை. என்னை அல்லாஹ் குணப்படுத்திவிட்டான். (அதை வெளியே எடுத்தால்) அது மக்களிடையே (சூனியக் கலை பரவக் காரணமாகி) குழப்பத்தைக் கிளப்பிவிடும் என்று நான் அஞ்சினேன்” என்று பதிலளித்தார்கள். பிறகு, அந்தக் கிணறு தூர்க்கப்பட்டுவிட்டது.72 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا ابراهيم بن موسى، اخبرنا عيسى، عن هشام، عن ابيه، عن عايشة رضى الله عنها قالت سحر النبي صلى الله عليه وسلم. وقال الليث كتب الى هشام انه سمعه ووعاه عن ابيه عن عايشة قالت سحر النبي صلى الله عليه وسلم حتى كان يخيل اليه انه يفعل الشىء وما يفعله، حتى كان ذات يوم دعا ودعا، ثم قال " اشعرت ان الله افتاني فيما فيه شفايي اتاني رجلان، فقعد احدهما عند راسي والاخر عند رجلى، فقال احدهما للاخر ما وجع الرجل قال مطبوب. قال ومن طبه قال لبيد بن الاعصم. قال في ماذا قال في مشط ومشاقة وجف طلعة ذكر. قال فاين هو قال في بير ذروان ". فخرج اليها النبي صلى الله عليه وسلم ثم رجع فقال لعايشة حين رجع " نخلها كانها رءوس الشياطين ". فقلت استخرجته فقال " لا اما انا فقد شفاني الله، وخشيت ان يثير ذلك على الناس شرا، ثم دفنت البير
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Beginning of Creation
- Hadith Index
- #3268
- Book Index
- 78
Grades
- -
