ஹதீஸ்கள்
#3267
ஸஹீஹ் அல்-புகாரீ - Beginning of Creation
அபூவாயில் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களிடம், ‘‘நீங்கள் இன்னாரிடம் (உஸ்மான் (ரலி) அவர்களிடம்) வந்து பேசியிருக்கக் கூடாதா? (அவர்கள் உங்களுக்கு நெருக்கமான வர்கள் ஆயிற்றே!)” என்று கேட்கப்பட்டது.69 அதற்கு அவர்கள், ‘‘நான் உங்கள் எதிரில் உங்களுக்குக் கேட்கும்படி (பொதுவான விஷயங்களை)யே தவிர (வேறெதுவும்) அவர்களிடம் பேசுவதில்லை என்பதை நீங்கள் பார்க்கவே செய்கிறீர்கள். நான் அவர்களிடம் (அரசியல் குழப்பம் குறித்துப் பேசுவதாயிருந்தால் கலகத்திற்குக்) கதவைத் திறந்துவிடாமல் இருப்பதற்காக இரகசியமாகவே பேசுகிறேன். (ஏனெனில், குழப்பத்தின்) கதவைத் திறந்த முதல் ஆள் நானாக இருக்க விரும்ப வில்லை.70 மேலும், ஒரு மனிதர் எனக்குத் தலைவராக (ஆணையிடும் அதிகாரத்தில்) இருப்பதால் அவரை மக்களில் சிறந்தவர் என்று நான் சொல்லமாட்டேன். (அதுவும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிட மிருந்து ஒரு விஷயத்தை நான் செவியுற்ற பிறகு (அப்படி) ஒருபோதும் நான் சொல்ல மாட்டேன்” என்று கூறினார்கள். மக்கள், ‘‘நபி (ஸல்) அவர்கள் என்ன சொல்லக் கேட்டீர்கள்?” என்று வினவினார்கள். அதற்கு அவர்கள், நான் நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு சொல்லக் கேட்டேன் என்றார்கள்: மறுமை நாளில் ஒரு மனிதர் கொண்டுவரப்பட்டு நரகத்தில் போடப்படுவார். அப்போது அவருடைய குடல்கள் வேகமாக நரகத்தில் வந்து விழும். கழுதை செக்கு இயந்திரத்தைச் சுற்றிவருவதைப்போல் அவர் சுற்றி வருவார். அப்போது நரகவாசிகள் அவரைச் சுற்றி ஒன்றுகூடி, ‘‘இன்னாரே! உமக்கேன் இந்த நிலை? நீர் (உலக வாழ்வின்போது) நற்செயல் புரியும்படி எங்களுக்குக் கட்டளையிட்டு, தீமை புரிய வேண்டாமென்று எங்களைத் தடுக்கவில்லையா?” என்று கேட்பார்கள். அதற்கு அவர், ‘‘நற்செயல் புரியும்படி உங்களுக்கு நான் கட்டளையிட்டேன்; ஆனால், அந்த நற்செயலை நான் செய்ய வில்லை. தீமை புரிய வேண்டாமென்று உங்களை நான் தடுத்துவந்தேன்; ஆனால், அந்தத் தீமையை நானே செய்துவந்தேன்” என்று கூறுவார். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا علي، حدثنا سفيان، عن الاعمش، عن ابي وايل،، قال قيل لاسامة لو اتيت فلانا فكلمته. قال انكم لترون اني لا اكلمه الا اسمعكم، اني اكلمه في السر دون ان افتح بابا لا اكون اول من فتحه، ولا اقول لرجل ان كان على اميرا انه خير الناس بعد شىء سمعته من رسول الله صلى الله عليه وسلم. قالوا وما سمعته يقول قال سمعته يقول " يجاء بالرجل يوم القيامة فيلقى في النار، فتندلق اقتابه في النار، فيدور كما يدور الحمار برحاه، فيجتمع اهل النار عليه، فيقولون اى فلان، ما شانك اليس كنت تامرنا بالمعروف وتنهى عن المنكر قال كنت امركم بالمعروف ولا اتيه، وانهاكم عن المنكر واتيه ". رواه غندر عن شعبة عن الاعمش
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Beginning of Creation
- Hadith Index
- #3267
- Book Index
- 77
Grades
- -
