ஹதீஸ்கள்
#3256
ஸஹீஹ் அல்-புகாரீ - Beginning of Creation
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், ‘‘சொர்க்கவாசிகள் தங்களுக்கு மேலேயுள்ள (சிறப்பு) அறைகளில் வசிப்பவர்களை, அடிவானில் கிழக்கிலிருந்தோ மேற்கிலிருந்தோ பயணிக்கின்ற ஒளிரும் நட்சத்திரத்தைப் பார்ப்பதைப் போன்று (ஆர்வத்துடன்) பார்ப்பார்கள். (தகுதியில்) தமக்கும் அவர்களுக்குமிடையேயுள்ள ஏற்றத் தாழ்வைக் கண்டு (ஏக்கம் கொண்டுதான்) அப்படிப் பார்ப்பார்கள்” என்று கூறினார்கள். (இதைக் கேட்ட) நபித்தோழர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! அவை நபிமார் கள் தங்குமிடங்கள்தானே? அவற்றை மற்றவர்கள் அடைய முடியாதல்லவா?” என்று கேட்டனர். நபி (ஸல்) அவர்கள், ‘‘இல்லை. என் உயிர் யார் கையில் உள்ளதோ அவன்மீது ஆணையாக! அ(ங்கே தங்குப)வர்கள் அல்லாஹ்வின் மீது (உறுதியான) நம்பிக்கை கொண்டு இறைத் தூதர்களை உண்மையாளர்கள் என ஏற்றுக்கொண்டவர்களே ஆவர்” எனப் பதிலளித்தார்கள். அத்தியாயம் :
حدثنا عبد العزيز بن عبد الله، قال حدثني مالك بن انس، عن صفوان بن سليم، عن عطاء بن يسار، عن ابي سعيد الخدري رضى الله عنه عن النبي صلى الله عليه وسلم قال " ان اهل الجنة يتراءيون اهل الغرف من فوقهم كما يتراءيون الكوكب الدري الغابر في الافق من المشرق او المغرب، لتفاضل ما بينهم ". قالوا يا رسول الله، تلك منازل الانبياء لا يبلغها غيرهم قال " بلى والذي نفسي بيده، رجال امنوا بالله وصدقوا المرسلين
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Beginning of Creation
- Hadith Index
- #3256
- Book Index
- 66
Grades
- -
