ஹதீஸ்கள்
#3254
ஸஹீஹ் அல்-புகாரீ - Beginning of Creation
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: சொர்க்கத்தில் முதலாவதாக நுழையும் அணியினர் பௌர்ணமி இரவில் ஒளிரும் சந்திரனைப் போன்று தோற்றமளிப்பார்கள். (அடுத்து) அவர்களின் சுவடுகளைப் பின் தொடர்ந்து சொர்க்கத்தினுள் நுழைபவர் கள், விண்ணில் நன்கு பிரகாசிக்கும் நட்சத்திரத்தைப் போன்று (பிரகாசமாகவும் அழகாகவும்) இருப்பார்கள். அவர்களின் உள்ளங்கள் ஒரே மனிதரின் உள்ளத்தைப் போன்றிருக்கும். அவர்களுக்கிடையே பரஸ்பர வெறுப்போ பொறாமையோ இருக்காது. ஒவ்வொரு மனிதருக்கும் யிஹூருல் ஈன்’ எனப்படும் அகன்ற (மான் போன்ற) விழிகளையுடைய மங்கையரிலிருந்து இரு துணைவியர் இருப்பார்கள். அவர்களுடைய கால்களின் எலும்பு மஜ்ஜைகள்கூட (காலின்) எலும்புக்கும் சதைக்கும் அப்பால் வெளியே தெரியும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا ابراهيم بن المنذر، حدثنا محمد بن فليح، حدثنا ابي، عن هلال، عن عبد الرحمن بن ابي عمرة، عن ابي هريرة رضى الله عنه عن النبي صلى الله عليه وسلم " اول زمرة تدخل الجنة على صورة القمر ليلة البدر، والذين على اثارهم كاحسن كوكب دري في السماء اضاءة، قلوبهم على قلب رجل واحد، لا تباغض بينهم ولا تحاسد، لكل امري زوجتان من الحور العين، يرى مخ سوقهن من وراء العظم واللحم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Beginning of Creation
- Hadith Index
- #3254
- Book Index
- 64
Grades
- -
