ஹதீஸ்கள்
#3246
ஸஹீஹ் அல்-புகாரீ - Beginning of Creation
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கத்தில் நுழைகின்ற முதல் அணியினர் பௌர்ணமி இரவின் (ஒளிரும்) சந்திரனைப் போன்று தோற்றமளிப்பார்கள். அவர்களுக்குப் பின்னே வருபவர்கள் பேரொளி வீசும் நட்சத்திரத்தைப் போன்றிருப்பார்கள். அவர்களின் உள்ளங்கள் ஒரே மனிதனின் உள்ளத்தைப் போன்றிருக்கும். அவர்களுக்கிடையே எந்த மனவேறுபாடும் இருக்காது; எந்தவிதக் குரோதமும் இருக்காது. அவர்களில் ஒவ்வொருவருக்கும் இரு துணைவியர் இருப்பார்கள். அவ்விருவரில் ஒவ்வொருவரின் காலின் எலும்பு மஜ்ஜைகூட (கால்) சதைக்கு அப்பாலிருந்து (பேரழகின் காரணத்தால்) வெளியே தெரியும். அவர்கள் காலையும் மாலையும் அல்லாஹ்வைத் துதித்துக்கொண்டி ருப்பார்கள். அவர்கள் நோயுறமாட்டார்கள். அவர்கள் மூக்குச் சிந்தமாட்டார்கள்; சளி உமிழமாட்டார்கள்; அவர்களுடைய பாத்தி ரங்கள் தங்கத்தாலும் வெள்ளியாலும் ஆனவை. அவர்களின் சீப்புகள் தங்கத்தால் ஆனவை. அவர்களின் தூப கலசங்களின் எரிபொருள் அகிலாக இருக்கும். அவர்களது வியர்வையில் கஸ்தூரி மணம் கமழும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். முஜாஹித் (ரஹ்) அவர்கள்கூறினார்கள்: காலை (புக்ரத்) என்பது ஃபஜ்ரின் ஆரம்ப நேரத்தையும், மாலை (அஷிய்யு) என்பது சூரியன் உச்சி சாய்ந்தது முதல் மறையும் வரையிலான நேரத்தையும் குறிக்கும். அத்தியாயம் :
حدثنا ابو اليمان، اخبرنا شعيب، حدثنا ابو الزناد، عن الاعرج، عن ابي هريرة رضى الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال " اول زمرة تدخل الجنة على صورة القمر ليلة البدر، والذين على اثرهم كاشد كوكب اضاءة، قلوبهم على قلب رجل واحد، لا اختلاف بينهم ولا تباغض، لكل امري منهم زوجتان، كل واحدة منهما يرى مخ ساقها من وراء لحمها من الحسن، يسبحون الله بكرة وعشيا، لا يسقمون ولا يمتخطون، ولا يبصقون، انيتهم الذهب والفضة، وامشاطهم الذهب، وقود مجامرهم الالوة قال ابو اليمان يعني العود ورشحهم المسك ". وقال مجاهد الابكار اول الفجر، والعشي ميل الشمس ان تراه تغرب
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Beginning of Creation
- Hadith Index
- #3246
- Book Index
- 57
Grades
- -
