ஹதீஸ்கள்
#3231
ஸஹீஹ் அல்-புகாரீ - Beginning of Creation
நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) நான் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘(தாங்கள் காயமடைந்த) உஹுத் நாளைவிடக் கடுமையானதொரு நாளைத் தாங்கள் சந்தித்ததுண்டா?” என்று கேட்டேன்.41 அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘நான் உன் சமுதாயத்தாரால் நிறையத் துன்பங் களைச் சந்தித்துவிட்டேன். அவர்களால் நான் சந்தித்த துன்பங்களிலேயே மிகக் கடுமையானது ‘அகபா’ (தாயிஃப்) உடைய நாளன்று சந்தித்த துன்பமேயாகும்.42 ஏனெனில், அன்று நான் என்னை ஏற்றுக்கொள்ளும்படி (தாயிஃப் நகரத் தலைவரான கினானா) இப்னு அப்தி யாலீல் பின் அப்தி குலால் என்பவருக்கு எடுத்துரைத்தேன். அவர் நான் விரும்பிய படி எனக்குப் பதிலளிக்கவில்லை.43 ஆகவே, நான் கவலையுடன் எதிர்ப் பட்ட திசையில் நடந்தேன். யிகர்னுஸ் ஸஆலிப்’ எனுமிடத்தை நான் அடையும் வரை நான் சுய உணர்வுக்கு வரவில்லை. அங்கு வந்து சேர்ந்தவுடன் என் தலையை உயர்த்தினேன். அப்போது (அங்கே வானத்தில்) ஒரு மேகம் என்மீது நிழலிட்டுக்கொண்டிருந்தது. நான் கூர்ந்து கவனித்தபோது அதில் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் இருந்தார்கள். அவர்கள் என்னை அழைத்து, ‘‘உங்கள் சமுதாயத்தார் உங்களிடம் சொன்னதையும் அவர்கள் உங்களுக்கு அளித்த பதிலையும் அல்லாஹ் கேட்டான். அவர்களை நீங்கள் விரும்பியபடி தண்டிப்பதற்கு ஆணையிடுவதற்காக மலைகளுக்கான வானவரை அல்லாஹ் உங்களிடம் அனுப்பியுள்ளான்” என்று கூறினார்கள். உடனே, மலைகளை நிர்வகிக்கும் வானவர் என்னை அழைத்து எனக்கு முகமன் (சலாம்) கூறினார். பிறகு, ‘‘முஹம்மதே! நீங்கள் விரும்பியபடி கட்டளையிடலாம். (இந்த நகரத்தின் இரு மருங்கிலும் உள்ள) இந்த இரு மலைகளை யும் அவர்கள்மீது நான் புரட்டிப் போட்டு விட வேண்டுமென்று நீங்கள் விரும்பி னாலும் (சரி, உங்கள் கட்டளைப்படி செயல்பட நான் தயாராக உள்ளேன்)” என்று கூறினார். அப்போது, ‘‘(வேண்டாம்;) ஆயினும், இந்த (நகரத்து) மக்களின் வழித்தோன்றல் களில் அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்காமல் அவனை மட்டுமே வழிபடுவோரை அல்லாஹ் உருவாக்குவான் என்று நான் நம்புகிறேன் (ஆகவே, அவர்களைத் தண்டிக்க வேண்டாம்)” என்று கூறிவிட்டேன். அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، اخبرنا ابن وهب، قال اخبرني يونس، عن ابن شهاب، قال حدثني عروة، ان عايشة رضى الله عنها زوج النبي صلى الله عليه وسلم حدثته انها قالت للنبي صلى الله عليه وسلم هل اتى عليك يوم كان اشد من يوم احد قال " لقد لقيت من قومك ما لقيت، وكان اشد ما لقيت منهم يوم العقبة، اذ عرضت نفسي على ابن عبد ياليل بن عبد كلال، فلم يجبني الى ما اردت، فانطلقت وانا مهموم على وجهي، فلم استفق الا وانا بقرن الثعالب، فرفعت راسي، فاذا انا بسحابة قد اظلتني، فنظرت فاذا فيها جبريل فناداني فقال ان الله قد سمع قول قومك لك وما ردوا عليك، وقد بعث اليك ملك الجبال لتامره بما شيت فيهم، فناداني ملك الجبال، فسلم على ثم قال يا محمد، فقال ذلك فيما شيت، ان شيت ان اطبق عليهم الاخشبين، فقال النبي صلى الله عليه وسلم بل ارجو ان يخرج الله من اصلابهم من يعبد الله وحده لا يشرك به شييا
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Beginning of Creation
- Hadith Index
- #3231
- Book Index
- 42
Grades
- -
