ஹதீஸ்கள்
#3208
ஸஹீஹ் அல்-புகாரீ - Beginning of Creation
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது : உண்மையே பேசியவரும் உண்மையே அறிவிக்கப்பட்டவருமான அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தம் தாயின் வயிற்றில் நாற்பது நாட்கள் (கருவாக) சேமிக்கப்படுகிறார்.21 பிறகு அதைப் போன்றே (நாற்பது நாட்கள்) அந்தக் கரு (அட்டைபோல் கருப்பையின் சுவரைப் பற்றிப் பிடித்துக் தொங்கும்) ஒரு கருக்கட்டியாக மாறுகிறது. பிறகு அதே போன்ற காலத்தில் (மெல்லப்பட்ட சக்கை போன்ற) சதைப்பிண்டமாக மாறுகிறது.22 பிறகு அல்லாஹ் ஒரு வானவரை (அதனிடம்) அனுப்புகிறான். அந்த வான வருக்கு நான்கு கட்டளைகள் பிறப்பிக் கப்படுகின்றன. (அவை:) அதன் செயல்பாடு, வாழ்வாதாரம், வாழ்நாள், நற்பேறற்றவனா அல்லது நற்பேறு பெற்றவனா என்று எழுதுமாறு அந்த வானவருக்குச் சொல்லப்படுகிறது. பிறகு அதனுள் உயிர் ஊதப்படும். இதனால்தான், உங்களில் ஒருவர் (நற்)செயல் புரிந்துகொண்டே செல்வார். எந்த அளவுக்கென்றால் அவருக்கும் சொர்க்கத்திற்கு மிடையே ஒரு முழம் (தொலைவு)தான் இருக்கும். அதற்குள் அவரது விதி அவரை முந்திக்கொண்டுவிடும். அவர் நரகவாசிகளின் செயலைச் செய்துவிடுவார். (அதன் விளைவாக, நரகம் புகுந்துவிடுவார்.) ஒருவர் (தீய) செயல் புரிந்துகொண்டே செல்வார். எந்த அளவுக்கென்றால் அவருக்கும் நரகத்திற்குமிடையே ஒரே யொரு முழம் (தொலைவு)தான் இருக்கும். அதற்குள் விதி அவரை முந்திக்கொண்டு விடும். அதனால் அவர் சொர்க்கவாசி களின் செயலைச் செய்வார். (அதன் காரணத்தால் சொர்க்கம் புகுவார்.) அத்தியாயம் :
حدثنا الحسن بن الربيع، حدثنا ابو الاحوص، عن الاعمش، عن زيد بن وهب، قال عبد الله حدثنا رسول الله صلى الله عليه وسلم وهو الصادق المصدوق قال " ان احدكم يجمع خلقه في بطن امه اربعين يوما، ثم يكون علقة مثل ذلك، ثم يكون مضغة مثل ذلك، ثم يبعث الله ملكا، فيومر باربع كلمات، ويقال له اكتب عمله ورزقه واجله وشقي او سعيد. ثم ينفخ فيه الروح، فان الرجل منكم ليعمل حتى ما يكون بينه وبين الجنة الا ذراع، فيسبق عليه كتابه، فيعمل بعمل اهل النار، ويعمل حتى ما يكون بينه وبين النار الا ذراع، فيسبق عليه الكتاب، فيعمل بعمل اهل الجنة
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Beginning of Creation
- Hadith Index
- #3208
- Book Index
- 19
Grades
- -
