ஹதீஸ்கள்
#3191
ஸஹீஹ் அல்-புகாரீ - Beginning of Creation
இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். என் ஒட்டகத்தை வாயில் அருகே கட்டிப்போட்டேன். அப்போது நபி (ஸல்) அவர்களிடம் பனூ தமீம் குலத்தைச் சேர்ந்த சிலர் வந்தனர். (அவர்களிடம்) நபி (ஸல்) அவர்கள், ‘‘(நான் அளிக்கும்) நற்செய்தியை ஏற்றுக்கொள்ளுங்கள், பனூ தமீம் குலத்தாரே!” என்று கூறினார்கள். அவர்கள், ‘‘எங்களுக்கு நற்செய்தி அளித் தீர்கள். அவ்வாறே எங்களுக்கு (தர்மம்) கொடுங்கள்” என்று (இருமுறை) கூறி னார்கள். பிறகு, யமன் நாட்டவர் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். (அவர் களிடமும்) நபி (ஸல்) அவர்கள், ‘‘யமன் வாசிகளே! (எனது) நற்செய்தியை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில், பனூ தமீம் குலத்தார் அதை ஏற்றுக்கொள்ள வில்லை” என்று கூறினார்கள். அதற்கு அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் ஏற்றுக்கொண்டோம்” என்று பதில் கூறினர். பிறகு ‘‘நாங்கள் தங்களிடம் இந்த (உலகம் எவ்வாறு படைக்கப்பட்டது எனும்) விஷயம் குறித்துக் கேட்பதற்காக வந்தோம்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘(ஆதியில்) அல்லாஹ் (மட்டுமே) இருந்தான். அவனைத் தவிர வேறெந்தப் பொருளும் இருக்கவில்லை. (பிறகு படைக்கப்பட்ட) அவனது அரியணை தண்ணீரின் மீதிருந்தது. பிறகு (லவ்ஹுல் மஹ்ஃபூழ் எனும்) பாதுகாக்கப்பட்ட பலகையில் அவன் எல்லா விஷயங்களையும் எழுதினான். பின்னர் வானங்கள் மற்றும் பூமியைப் படைத்தான்” என்று கூறினார்கள்.5 அப்போது ஒருவர் (என்னை) அழைத்து, ‘‘ஹுஸைனின் மகனே! உங்கள் ஒட்டகம் ஓடிப்போய்விட்டது” என்று கூற, நான் (அதைத் தேடிப்பார்க்க எழுந்து) சென்றுவிட்டேன். சென்று பார்த்தால் ஒட்டகத்தைக் காணமுடியாதவாறு கானல் நீர் தடுத்துவிட்டது. அல்லாஹ்வின் மீதாணையாக! யிநான் அதை அப்படியே விட்டுவிட்டிருந்தால் நன்றாயிருந்திருக்குமே! (படைப்பின் ஆரம்பம் குறித்து நபி (ஸல்) அவர்கள் இன்னும் என்னவெல்லாம் சொன்னார்கள் எனத் தெரிந்து கொண்டிருக்கலாமே)› என்று நான் ஆசைப்பட்டேன். அத்தியாயம் :
حدثنا عمر بن حفص بن غياث، حدثنا ابي، حدثنا الاعمش، حدثنا جامع بن شداد، عن صفوان بن محرز، انه حدثه عن عمران بن حصين رضى الله عنهما قال دخلت على النبي صلى الله عليه وسلم وعقلت ناقتي بالباب، فاتاه ناس من بني تميم فقال " اقبلوا البشرى يا بني تميم ". قالوا قد بشرتنا فاعطنا. مرتين، ثم دخل عليه ناس من اهل اليمن فقال " اقبلوا البشرى يا اهل اليمن، اذ لم يقبلها بنو تميم ". قالوا قد قبلنا يا رسول الله، قالوا جيناك نسالك عن هذا الامر قال " كان الله ولم يكن شىء غيره، وكان عرشه على الماء، وكتب في الذكر كل شىء، وخلق السموات والارض ". فنادى مناد ذهبت ناقتك يا ابن الحصين. فانطلقت فاذا هي يقطع دونها السراب، فوالله لوددت اني كنت تركتها
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Beginning of Creation
- Hadith Index
- #3191
- Book Index
- 2
Grades
- -
