ஹதீஸ்கள்
#3155
ஸஹீஹ் அல்-புகாரீ - One-fifth of Booty to the Cause of Allah
இப்னு அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது: கைபர் கோட்டையின் முற்றுகையில் ஈடுபட்டிருந்த நாட்களில் நாங்கள் பசி பட்டினியால் பாதிக்கப்பட்டிருந்தோம். கைபர் போர் தொடங்கிய நாளன்று நாங்கள் நாட்டுக் கழுதைகளை (போர்ச் செல்வமாக)ப் பெற்று அவற்றை அறுத் தோம். (அவற்றைச் சமைக்கின்ற) பாத்திரங்கள் கொதிக்கத் தொடங்கியபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களுடைய அறிவிப்பாளர், ‘‘பாத்திரங்களைக் கவிழ்த்துவிடுங்கள். கழுதைகளின் இறைச்சிகளில் சிறிதும் உண்ணாதீர்கள்” என்று (உரக்கக் கூவி) அறிவித்தார். (அறிவிப்பாளர்) அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் (தொடர்ந்து) கூறுகிறார்கள்: இந்த அறிவிப்பைச் செவியுற்ற நாங்கள், ‘‘அதிலிருந்து ஐந்தில் ஒரு பங்கு (குமுஸ்) செலுத்தப்படாததே இந்தத் தடை அறிவிப்புக்குக் காரணம்” என்று சொன்னோம். மற்றவர்கள், ‘‘(அப்படியல்ல;) அதை என்றைக்குமாக நபி (ஸல்) அவர்கள் தடை செய்துவிட்டார்கள்” என்று கூறினார்கள். சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்களும் நிரந்தரமாகத் தடை செய்தார்கள் என்றே கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا موسى بن اسماعيل، حدثنا عبد الواحد، حدثنا الشيباني، قال سمعت ابن ابي اوفى رضى الله عنهما يقول اصابتنا مجاعة ليالي خيبر، فلما كان يوم خيبر وقعنا في الحمر الاهلية، فانتحرناها فلما غلت القدور، نادى منادي رسول الله صلى الله عليه وسلم اكفيوا القدور، فلا تطعموا من لحوم الحمر شييا. قال عبد الله فقلنا انما نهى النبي صلى الله عليه وسلم لانها لم تخمس. قال وقال اخرون حرمها البتة. وسالت سعيد بن جبير فقال حرمها البتة
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- One-fifth of Booty to the Cause of Allah
- Hadith Index
- #3155
- Book Index
- 63
Grades
- -
