ஹதீஸ்கள்
#3150
ஸஹீஹ் அல்-புகாரீ - One-fifth of Booty to the Cause of Allah
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஹுனைன் போரின்போது நபி (ஸல்) அவர்கள் மக்கள் சிலருக்கு முன்னுரிமை வழங்கி அதிகமாகக் கொடுத்தார்கள். அக்ரஉ பின் ஹாபிஸ் (ரலி) அவர்களுக்கு நூறு ஒட்டகங்களைக் கொடுத்தார்கள். உயைனா (ரலி) அவர்களுக்கும் அது போன்றே கொடுத்தார்கள். (போரில் கிடைத்த பொருட்களைப்) பங்கிடும்போது பிரமுகர்களில் சிலருக்கு முன்னுரிமை வழங்கி அதிகமாகக் கொடுத்தார்கள். அப்போது ஒரு மனிதர், ‘‘அல்லாஹ் வின் மீதாணையாக! இந்தப் பங்கீட்டில் நீதி கடைப்பிடிக்கப்படவில்லை; இது அல்லாஹ்வின் திருப்தி நாடப்படாத ஒரு பங்கீடாகும்” என்று கூறினார். நான், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் நபி (ஸல்) அவர்களுக்கு (இதைத்) தெரிவிப்பேன்” என்று கூறினேன். பிறகு நபி (ஸல்) அவர்களிடம் சென்று அதைத் தெரிவித்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நீதியுடன் நடந்து கொள்ளாவிட்டால் வேறு யார்தான் நீதியுடன் நடந்துகொள்வார்கள்? அல்லாஹ், (இறைத்தூதர்) மூசா அவர்களுக்குக் கருணை புரிவானாக! அவர்கள் இதைவிட அதிகமாக மனவேதனைக்கு ஆளாக்கப்பட்டார்கள். ஆயினும் (அதைச்) சகித்துக் கொண்டார்கள்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا عثمان بن ابي شيبة، حدثنا جرير، عن منصور، عن ابي وايل، عن عبد الله رضى الله عنه قال لما كان يوم حنين اثر النبي صلى الله عليه وسلم اناسا في القسمة، فاعطى الاقرع بن حابس ماية من الابل، واعطى عيينة مثل ذلك، واعطى اناسا من اشراف العرب، فاثرهم يوميذ في القسمة. قال رجل والله ان هذه القسمة ما عدل فيها، وما اريد بها وجه الله. فقلت والله لاخبرن النبي صلى الله عليه وسلم. فاتيته فاخبرته فقال " فمن يعدل اذا لم يعدل الله ورسوله رحم الله موسى قد اوذي باكثر من هذا فصبر
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- One-fifth of Booty to the Cause of Allah
- Hadith Index
- #3150
- Book Index
- 58
Grades
- -
