ஹதீஸ்கள்
#3147
ஸஹீஹ் அல்-புகாரீ - One-fifth of Booty to the Cause of Allah
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஹவாஸின் குலத்தாரின் செல்வத்தை அல்லாஹ், தன் தூதருக்கு (ஹுனைன் போரில்) அளித்தபோது அவர்கள் குறைஷியரில் சிலருக்கு நூறு ஒட்டகங் களைக் கொடுக்கலானார்கள்.64 உடனே அன்சாரிகளில் சிலர், ‘‘அல்லாஹ் தன் தூதர் (ஸல்) அவர்களை மன்னிப்பானாக! நம் வாட்களில் எதிரிகளின் இரத்தம் சொட்டிக்கொண்டிருக்க குறைஷியருக்குக் கொடுக்கிறார்கள்; நம்மை விட்டுவிடுகிறார் களே!” என்று பேசிக்கொண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அவர்களின் இந்தப் பேச்சு தெரிவிக்கப் பட்டது. உடனே நபி (ஸல்) அவர்கள் அன்சாரிகளிடம் ஆளனுப்பி அவர்களை வரச்சொல்லி, பதனிடப்பட்ட தோலால் ஆன கூடாரம் ஒன்றில் அவர்களை ஒன்றுதிரட்டினார்கள். அவர்களுடன் வேறெவரையும் அவர்கள் அழைக்கவில்லை. அவர்கள் ஒன்றுதிரண்டபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து, ‘‘உங்களைப் பற்றி எனக்கு எட்டிய செய்தி என்ன?” என்று கேட்டார்கள். அன்சாரிகளிடையே இருந்த அறிஞர்கள், ‘‘எங்களில் கருத்துடையோர் எதுவும் சொல்லவில்லை, அல்லாஹ்வின் தூதரே! ஆயினும், எங்களிடையேயுள்ள இளம் வயது வாலிபர்கள், அல்லாஹ் தன் தூதர் (ஸல்) அவர்களை மன்னிப்பானாக! நம் வாட்களில் எதிரிகளின் இரத்தம் சொட்டிக் கொண்டிருக்க குறைஷியருக்குக் கொடுக்கி றார்கள். ஆனால், நம்மை விட்டுவிடுகிறார் களே!› என்று பேசிக்கொண்டார்கள்” என்று பதில் கூறினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இறைமறுப்பைக் கைவிட்டு இப்போதுதான் புதிதாக இஸ்லாத்தைத் தழுவியவர்களுக்கு நான் கொடுக்கிறேன். மக்களெல்லாரும் செல்வங்களை எடுத்துக் கொண்டுசெல்ல, உங்கள் வசிப்பிடத்திற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை (உங்களுடன் அழைத்துக்)கொண்டு செல்வதை நீங்கள் விரும்பவில்லையா? அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் எடுத்துக்கொண்டு திரும்பிச் செல்ப வற்றைவிட நீங்கள் எடுத்துக்கொண்டு திரும்பிச் செல்வதே சிறந்ததாகும்” என்று சொன்னார்கள். உடனே அன்சாரிகள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! ஆம்; (நீங்களே எங்களுக்குப் போதுமென்று) நாங்கள் திருப்தியடைந் தோம்” என்று பதிலளித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘எனக்குப்பின், (ஆட்சிப் பொறுப்பிலும் போரில் கிடைக்கும் செல்வங்களைப் பங்கிடுவதிலும்) உங்களைவிட மற்றவர் களுக்கு மிக அதிகமாக முன்னுரிமை வழங்கப்படுவதை நீங்கள் காண்பீர்கள். அந்நிலையில் அல்லாஹ்வையும் யிஹவ்ளுல் கவ்ஸர்’ தடாகத்தின் அருகே அவனுடைய தூதரை (என்னை)யும் சந்திக்கும்வரை பொறுமையைக் கைக் கொள்ளுங்கள்” என்று சொன்னார்கள். இதை அறிவித்துவிட்டு அனஸ் (ரலி) அவர்கள், ‘‘ஆனால், நாங்கள் பொறுமையைக் கைக்கொள்ளவில்லை” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
حدثنا ابو اليمان، اخبرنا شعيب، حدثنا الزهري، قال اخبرني انس بن مالك، ان ناسا، من الانصار قالوا لرسول الله صلى الله عليه وسلم حين افاء الله على رسوله صلى الله عليه وسلم من اموال هوازن ما افاء، فطفق يعطي رجالا من قريش الماية من الابل فقالوا يغفر الله لرسول الله صلى الله عليه وسلم يعطي قريشا ويدعنا، وسيوفنا تقطر من دمايهم قال انس فحدث رسول الله بمقالتهم، فارسل الى الانصار، فجمعهم في قبة من ادم، ولم يدع معهم احدا غيرهم، فلما اجتمعوا جاءهم رسول الله صلى الله عليه وسلم فقال " ما كان حديث بلغني عنكم ". قال له فقهاوهم اما ذوو اراينا يا رسول الله فلم يقولوا شييا، واما اناس منا حديثة اسنانهم فقالوا يغفر الله لرسول الله صلى الله عليه وسلم يعطي قريشا ويترك الانصار، وسيوفنا تقطر من دمايهم. فقال رسول الله صلى الله عليه وسلم " اني اعطي رجالا حديث عهدهم بكفر، اما ترضون ان يذهب الناس بالاموال وترجعون الى رحالكم برسول الله صلى الله عليه وسلم، فوالله ما تنقلبون به خير مما ينقلبون به ". قالوا بلى يا رسول الله قد رضينا. فقال لهم " انكم سترون بعدي اثرة شديدة، فاصبروا حتى تلقوا الله ورسوله صلى الله عليه وسلم على الحوض ". قال انس فلم نصبر
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- One-fifth of Booty to the Cause of Allah
- Hadith Index
- #3147
- Book Index
- 55
Grades
- -
