ஹதீஸ்கள்
#3144
ஸஹீஹ் அல்-புகாரீ - One-fifth of Booty to the Cause of Allah
நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! அறியாமைக் காலத்தில் (இஸ்லாத்தைத் தழுவும் முன்பு), ஒருநாள் இஃதிகாஃப் இருப்பதாக நான் நேர்ச்சை செய்திருந்தேன். (அந்த நேர்ச்சையை இன்னும் நான் நிறைவேற்றவில்லை. இப்போது அதை நான் நிறைவேற்றலாமா?)” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அதை நிறைவேற்றும்படி உமர் (ரலி) அவர்களுக்கு உத்தரவிட்டார்கள். மேலும், உமர் (ரலி) அவர்கள் ஹுனைன் போரில் பிடிபட்ட போர்க் கைதிகளிலிருந்து இரண்டு அடிமைப் பெண்களைப் பெற்றிருந்தார்கள். அவ்விருவரையும் மக்காவிலுள்ள ஒரு வீட்டில் தங்கவைத்திருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹுனைன் போரில் பிடிபட்ட கைதிகளுக்குக் கருணை காட்டி அவர் களைச் சுதந்திரமாக விட்டுவிட்டிருந்தார்கள். ஆகவே, அவர்கள் சாலைகளில் (சுதந்திரமாக) நடமாடத் தொடங்கினார்கள். உடனே உமர் (ரலி) அவர்கள் தம் மகன் அப்துல்லாஹ் (ரலி) அவர்களிடம், ‘‘அப்துல்லாஹ்வே! இங்கே பார். என்ன இது” என்று கேட்டார்கள். அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் போர்க் கைதிகள் மீது கருணை புரிந்து அவர்களைச் சுதந்திரமாக விட்டுவிட்டார்கள்” என்று சொன்னார்கள். (உடனே) உமர் (ரலி) அவர்கள், ‘‘அப்படியென்றால் நீ சென்று அந்த இரு அடிமைப் பெண்களையும் சுதந்திரமாகச் செல்ல விட்டுவிடு” என்று கூறினார்கள். மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜிஅரானாவிலிருந்து உம்ரா செய்யவில்லை. அப்படி அவர்கள் உம்ரா செய்திருந்தால் அது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுக்குத் தெரியாமலிருந்திருக்காது. இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஜரீர் பின் ஹாஸிம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ‘‘குமுஸ் (ஐந்திலொரு பங்கு) நிதியிலிருந்து இந்த இரு அடிமைப் பெண்களையும் நபி (ஸல்) அவர்கள் உமர் (ரலி) அவர்களுக்கு கொடுத்தார்கள்” என்று வந்துள்ளது. மஅமர் பின் ஸாயித் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், உமர் (ரலி) அவர்கள் அறியாமைக் காலத்தில் செய்த நேர்ச்சை குறித்து, ‘‘இஃதிகாஃப் செய்வதாக நேர்ச்சை செய்திருந்தேன்” என்று மட்டுமே வந்துள்ளது. ‘‘ஒருநாள் இஃதிகாஃப் செய்வதாக நேர்ச்சை செய்திருந்தேன்” என்று (யிஒருநாள்’ எனும் குறிப்பு) இடம் பெறவில்லை.62 அத்தியாயம் :
حدثنا ابو النعمان، حدثنا حماد بن زيد، عن ايوب، عن نافع، ان عمر بن الخطاب رضى الله عنه قال يا رسول الله انه كان على اعتكاف يوم في الجاهلية، فامره ان يفي به. قال واصاب عمر جاريتين من سبى حنين، فوضعهما في بعض بيوت مكة قال فمن رسول الله صلى الله عليه وسلم على سبى حنين، فجعلوا يسعون في السكك فقال عمر يا عبد الله، انظر ما هذا فقال من رسول الله صلى الله عليه وسلم على السبى. قال اذهب فارسل الجاريتين. قال نافع ولم يعتمر رسول الله صلى الله عليه وسلم من الجعرانة ولو اعتمر لم يخف على عبد الله. وزاد جرير بن حازم عن ايوب عن نافع عن ابن عمر قال من الخمس. ورواه معمر عن ايوب عن نافع عن ابن عمر في النذر ولم يقل يوم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- One-fifth of Booty to the Cause of Allah
- Hadith Index
- #3144
- Book Index
- 52
Grades
- -
