ஹதீஸ்கள்
#3143
ஸஹீஹ் அல்-புகாரீ - One-fifth of Booty to the Cause of Allah
ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் (நிதியுதவி) கேட்டேன். அவர்கள் எனக்குக் கொடுத்தார்கள். மீண்டும் அவர்களிடம் (நிதியுதவி) கேட் டேன். அப்போதும் அவர்கள் எனக்குக் கொடுத்தார்கள். பிறகு என்னிடம், ‘‘ஹகீமே! இந்தச் செல்வம் (பார்க்கப்) பசுமையானதும் (சுவைக்க) இனிப்பானதும் ஆகும். யார் இதை(ப் பேராசையின்றி) கொடையுள்ளத் தோடு பெறுகிறாரோ அவருக்கு இதில் வளம் (பரக்கத்) வழங்கப்படும். யார் இதைப் பேராசையுடன் எடுத்துக் கொள்கிறாரோ அவருக்கு இதில் வளம் வழங்கப்படுவதில்லை. அவர் (நிறையத்) தின்றும் வயிறு நிரம்பாதவனைப் போன்றவராவார். மேலும், (கொடுக்கும்) உயர்ந்த கைதான் (வாங்கும்) தாழ்ந்த கையைவிட மேலானதாகும்” என்று கூறினார்கள். நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! தங்களைச் சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பியவன்மீது சத்தியமாக! தங்களுக்குப்பின், நான் (இந்த) உலகைவிட்டுப் பிரியும்வரை வேறெவரிடமிருந்தும் எதையும் பெற்றுக்கொள்ளமாட்டேன்” என்று கூறினேன். அறிவிப்பாளர் உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அபூபக்ர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சிக் காலத்தில்) ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்களுக்கு அன்பளிப்பு (நிதியை) வழங்க அழைப்புக் கொடுத்துவந்தார்கள். ஆனால், ஹகீம் (ரலி) அவர்கள், அபூபக்ர் (ரலி) அவர்களிடமிருந்து எதையும் ஏற்க மறுத்துவிட்டார்கள். பிறகு உமர் (ரலி) அவர்கள் ஹகீம் (ரலி) அவர்களுக்கு (நிதி வழங்க) அழைப்புக் கொடுத்தார்கள். அவர்களிடமிருந்தும் (உதவி நிதியை) ஏற்க அவர்கள் மறுத்துவிட்டார்கள். ஆகவே, உமர் (ரலி) அவர்கள், ‘‘முஸ்லிம்களே! (வெற்றி கொள்ளப்பட்ட நாடுகளிலிருந்து கிடைக்கும்) இந்தச் செல்வத்திலிருந்து ஹகீம் அவர்களின் பங்காக அல்லாஹ் கொடுத்த அவரது உரிமையை அவர்முன் நான் சமர்ப்பித்து விட்டேன். அவர் அதை ஏற்க மறுத்து விட்டார்” என்று கூறினார்கள். இவ்விதம் ஹகீம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்குப்பிறகு மக்களில் எவரிடமிருந்தும் எதையும், தாம் இறக்கும்வரை பெற்றுக் கொள்ளவில்லை.61 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا محمد بن يوسف، حدثنا الاوزاعي، عن الزهري، عن سعيد بن المسيب، وعروة بن الزبير، ان حكيم بن حزام رضى الله عنه قال سالت رسول الله صلى الله عليه وسلم فاعطاني، ثم سالته فاعطاني، ثم قال لي " يا حكيم، ان هذا المال خضر حلو، فمن اخذه بسخاوة نفس بورك له فيه، ومن اخذه باشراف نفس لم يبارك له فيه، وكان كالذي ياكل ولا يشبع، واليد العليا خير من اليد السفلى ". قال حكيم فقلت يا رسول الله، والذي بعثك بالحق لا ارزا احدا بعدك شييا حتى افارق الدنيا. فكان ابو بكر يدعو حكيما ليعطيه العطاء، فيابى ان يقبل منه شييا، ثم ان عمر دعاه ليعطيه فابى ان يقبل فقال يا معشر المسلمين، اني اعرض عليه حقه الذي قسم الله له من هذا الفىء، فيابى ان ياخذه. فلم يرزا حكيم احدا من الناس بعد النبي صلى الله عليه وسلم حتى توفي
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- One-fifth of Booty to the Cause of Allah
- Hadith Index
- #3143
- Book Index
- 51
Grades
- -
