ஹதீஸ்கள்
#3113
ஸஹீஹ் அல்-புகாரீ - One-fifth of Booty to the Cause of Allah
அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: (என் துணைவியாரான) ஃபாத்திமா அவர்கள் மாவரைக்கும் திருகையினால் தமக்கு ஏற்பட்ட வேதனையைக் குறித்து முறையிட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சில போர்க் கைதிகள் கொண்டுவரப்பட்டிருக்கிறார்கள் (அவர் களை நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களிடையே பங்கிடவிருக்கிருக்கிறார்கள்) என்னும் செய்தி ஃபாத்திமா (ரலி) அவர்களுக்கு எட்டியது. அப்போது அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் (அந்தப் போர்க் கைதிகளிலிருந்து) ஒரு பணியாளை (தமக்குக் கொடுக்கும்படி) கேட்கச் சென்றார்கள். ஆனால், நபி (ஸல்) அவர்கள் வீட்டில் இல்லாததால் அவர்களை ஃபாத்திமா (ரலி) அவர்களால் அந்த நேரத்தில் சந்திக்க முடியவில்லை. ஆகவே, ஆயிஷா (ரலி) அவர்களிடம் (தாம் வந்த காரணத்தைக்) கூறி(விட்டுத் திரும்பி)னார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்கள் வந்தவுடன் அவர்களுக்கு ஆயிஷா (ரலி) அவர்கள் விஷயத்தைச் சொன்னார்கள். (விவரமறிந்துகொண்ட) நபி (ஸல்) அவர்கள் நாங்கள் படுக்கைக்குச் சென்றுவிட்ட பின்னால் எங்களிடம் வருகை தந்தார்கள். அவர்களைக் கண்டவுடன் நாங்கள் எழுந்து நிற்க முனைந்தோம். நபி (ஸல்) அவர்கள், ‘‘(எழுந்திருக்க வேண்டாம்.) உங்கள் இடத்திலேயே இரு வரும் இருங்கள்” என்று கூறினார்கள். (பிறகு) நான் அவர்களின் பாதத்தின் குளிர்ச்சியை என் நெஞ்சின்மீது உணர்ந் தேன். (அந்த அளவுக்கு எங்கள் அருகில் வந்து அமர்ந்துகொண்டார்கள்). பின்னர், ‘‘நீங்கள் இருவரும் என்னிடம் கேட்டதைவிடச் சிறந்த ஒன்றை உங்க ளுக்கு நான் அறிவிக்கட்டுமா? நீங்கள் படுக்கைக்குச் செல்லும்போது, ‘அல்லாஹு அக்பர்’ (அல்லாஹ் பெரியவன்) என்று முப்பத்து நான்கு முறையும், ‘அல்ஹம்து லில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ் வுக்கே) என்று முப்பத்து மூன்று முறையும், யிசுப்ஹானல்லாஹ்’ (அல்லாஹ் தூயவன்) என்று முப்பத்து மூன்று முறையும் சொல்லுங்கள். ஏனெனில், அது நீங்கள் இருவரும் என்னிடம் கேட்டதைவிடச் சிறந்ததாகும்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
حدثنا بدل بن المحبر، اخبرنا شعبة، قال اخبرني الحكم، قال سمعت ابن ابي ليلى، حدثنا علي، ان فاطمة عليها السلام اشتكت ما تلقى من الرحى مما تطحن، فبلغها ان رسول الله صلى الله عليه وسلم اتي بسبى، فاتته تساله خادما فلم توافقه، فذكرت لعايشة، فجاء النبي صلى الله عليه وسلم فذكرت ذلك عايشة له، فاتانا وقد دخلنا مضاجعنا، فذهبنا لنقوم فقال " على مكانكما " حتى وجدت برد قدميه على صدري فقال " الا ادلكما على خير مما سالتماه، اذا اخذتما مضاجعكما فكبرا الله اربعا وثلاثين، واحمدا ثلاثا وثلاثين، وسبحا ثلاثا وثلاثين، فان ذلك خير لكما مما سالتماه
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- One-fifth of Booty to the Cause of Allah
- Hadith Index
- #3113
- Book Index
- 22
Grades
- -
