ஹதீஸ்கள்
#3101
ஸஹீஹ் அல்-புகாரீ - One-fifth of Booty to the Cause of Allah
நபி (ஸல்) அவர்களின் துணைவி யாரான ஸஃபிய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது: ரமளான் மாதத்தின் இறுதிப் பத்து நாட்களில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருந்துகொண்டிருந்தபோது நான் அவர் களைச் சந்திக்கச் சென்றேன்; (சந்தித்து முடித்த) பின்பு திரும்பிச் செல்ல எழுந்தேன். என்னுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் எழுந்தார்கள். தமது (மற்றொரு) மனைவி உம்மு சலமா (ரலி) அவர்களின் வீட்டு வாசலை ஒட்டியுள்ள பள்ளிவாசல் கதவுக்கு அருகே வந்து சேர்ந்தபோது எங்கள் இருவரையும் இரண்டு அன்சாரிகள் கடந்துசென்றனர். அவ்விருவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கி சலாம் கூறி விட்டுச் சென்றுவிட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்விருவரையும் நோக்கி, ‘‘அவசரப்படாதீர்கள். (இவர் என் மனைவிதான்)” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் இப்படித் தங்களிடம் சொன்னது அவர்களுக்கு மன வருத்தத்தை அளித்தது. அதற்கு அவ்விருவரும், ‘‘அல்லாஹ் தூயவன். அல்லாஹ்வின் தூதரே! (தங்களை நாங்கள் சந்தேகிப்போமா?)” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘மனிதனின் இரத்தம் சென்றடை யும் இடங்களில் எல்லாம் ஷைத்தானும் சென்றடைகின்றான். உங்கள் உள்ளங்களில் அவன் சந்தேகம் எதையேனும் போட்டு விடுவானோ என்று நான் அஞ்சினேன்” என்று பதிலளித்தார்கள்.16 அத்தியாயம் :
حدثنا سعيد بن عفير، قال حدثني الليث، قال حدثني عبد الرحمن بن خالد، عن ابن شهاب، عن علي بن حسين، ان صفية، زوج النبي صلى الله عليه وسلم اخبرته انها جاءت رسول الله صلى الله عليه وسلم تزوره، وهو معتكف في المسجد في العشر الاواخر من رمضان ثم قامت تنقلب فقام معها رسول الله صلى الله عليه وسلم حتى اذا بلغ قريبا من باب المسجد عند باب ام سلمة زوج النبي صلى الله عليه وسلم مر بهما رجلان من الانصار، فسلما على رسول الله صلى الله عليه وسلم، ثم نفذا فقال لهما رسول الله صلى الله عليه وسلم " على رسلكما ". قالا سبحان الله يا رسول الله. وكبر عليهما ذلك. فقال " ان الشيطان يبلغ من الانسان مبلغ الدم، واني خشيت ان يقذف في قلوبكما شييا
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- One-fifth of Booty to the Cause of Allah
- Hadith Index
- #3101
- Book Index
- 10
Grades
- -
