ஹதீஸ்கள்
#3053
ஸஹீஹ் அல்-புகாரீ - Fighting for the Cause of Allah
சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘(அன்று) வியாழக்கிழமை! எந்த வியாழக்கிழமை (தெரியுமா)?” என்று கேட்டுவிட்டு, சரளைக்கல் பூமியை நனைத்துவிடும் அளவுக்குக் கண்ணீர் விட்டு அழுதார்கள். பிறகு கூறினார்கள்: அந்த வியாழக்கிழமையன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது (நோயின்) வேதனை கடுமையாயிற்று. அப்போது அவர்கள், ‘‘ஓர் ஏட்டை என்னி டம் கொண்டுவாருங்கள். உங்களுக்கு ஒரு மடலை நான் எழுதித்தருகிறேன். அதன் பிறகு நீங்கள் ஒருபோதும் வழி தவறமாட்டீர்கள்” என்று கூறினார்கள். அப்போது மக்கள் (கருத்து வேறுபாடு கொண்டு) சச்சரவிட்டுக்கொண்டார்கள். ஆனால், ஓர் இறைத்தூதரின் முன்னால் சச்சரவு செய்வது முறையல்ல. மக்கள், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பலவீனத்தில் பேசுகிறார்கள்” என்று கூறினார்கள். ஆகவே நபி (ஸல்) அவர்கள், ‘‘என்னை விட்டுவிடுங்கள். நீங்கள் என்னை அழைக்கின்ற (மரண சாசனம் எழுதும்) பணியைவிட நான் இப்போதுள்ள (இறை நினைவில் இருக்கும்) நிலையே சிறந்தது” என்று சொல்லிவிட்டார்கள்.166 மேலும், அவர்கள் தமது மரணத் தருவாயில் மூன்று விஷயங்களை வலியுறுத்தினார்கள். அவை: அரபு தீபகற்பத்திலிருந்து இணைவைப்பாளர் களை வெளியேற்றுங்கள். (அயல் நாடுகள் மற்றும் குலங்களின்) தூதுக்குழுவினருக்கு நான் வழங்கிவந்ததைப் போன்று நீங்களும் பரிசுப் பொருள்களை வழங்குங்கள். லிமூன்றாவது கட்டளையை நான் மறந்துவிட்டேன்லி யஅகூப் பின் முஹம்மத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் முஃகீரா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்களிடம் அரபு தீபகற்பம் பற்றிக் கேட்டேன். அவர்கள், யிமக்கா, மதீனா, யமாமா, யமன் ஆகியவை’ என்று பதிலளித்தார்கள். மேலும் யஅகூப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (மக்காலிமதீனா இடையே உள்ள) ‘அல்அர்ஜ்’ எனும் இடம்தான் திஹாமாவின் முதற் கட்டமாகும். அத்தியாயம் :
حدثنا قبيصة، حدثنا ابن عيينة، عن سليمان الاحول، عن سعيد بن جبير، عن ابن عباس رضى الله عنهما انه قال يوم الخميس، وما يوم الخميس ثم بكى حتى خضب دمعه الحصباء فقال اشتد برسول الله صلى الله عليه وسلم وجعه يوم الخميس فقال " ايتوني بكتاب اكتب لكم كتابا لن تضلوا بعده ابدا ". فتنازعوا ولا ينبغي عند نبي تنازع فقالوا هجر رسول الله صلى الله عليه وسلم. قال " دعوني فالذي انا فيه خير مما تدعوني اليه ". واوصى عند موته بثلاث " اخرجوا المشركين من جزيرة العرب، واجيزوا الوفد بنحو ما كنت اجيزهم ". ونسيت الثالثة. وقال يعقوب بن محمد سالت المغيرة بن عبد الرحمن عن جزيرة العرب. فقال مكة والمدينة واليمامة واليمن. وقال يعقوب والعرج اول تهامة
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #3053
- Book Index
- 259
Grades
- -
