ஹதீஸ்கள்
#3051
ஸஹீஹ் அல்-புகாரீ - Fighting for the Cause of Allah
சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (ஹுனைன் போருக்கான) பயணத்தில் இருந்தபோது அவர்களிடம் இணைவைப்பாளர்களில் உளவாளி ஒருவன் வந்தான்; நபி (ஸல்) அவர்களின் தோழர்களிடம் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தான். பிறகு திரும்பிச் சென்றுவிட்டான். நபி (ஸல்) அவர்கள் (விஷயம் தெரிந்தவுடன்), ‘‘அவனைத் தேடிப்பிடித்துக் கொன்றுவிடுங்கள்” என்று உத்தரவிட்டார்கள்.163 நான் அவனை (தேடிப்பிடித்துக்) கொன்றுவிட்டேன். அவனிடமிருந்து கைப்பற்றப்பட்ட அவனுடைய உடைமை களை (போர்ச் செல்வத்தில் என் பங்கிற்கு மேல்) கூடுதலாக நபி (ஸல்) அவர்கள் எனக்குக் கொடுத்தார்கள். அத்தியாயம் :
حدثنا ابو نعيم، حدثنا ابو العميس، عن اياس بن سلمة بن الاكوع، عن ابيه، قال اتى النبي صلى الله عليه وسلم عين من المشركين وهو في سفر، فجلس عند اصحابه يتحدث ثم انفتل، فقال النبي صلى الله عليه وسلم " اطلبوه واقتلوه ". فقتله فنفله سلبه
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #3051
- Book Index
- 257
Grades
- -
