ஹதீஸ்கள்
#3047
ஸஹீஹ் அல்-புகாரீ - Fighting for the Cause of Allah
அபூஜுஹைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அலீ (ரலி) அவர்களிடம், ‘‘உங்க ளிடம் அல்லாஹ்வின் வேதத்திலிருப்ப தைத் தவிர இறையறிவிப்புகளிலிருந்து (வேறு) ஏதும் இருக்கிறதா?” என்று கேட் டேன். அவர்கள், ‘‘இல்லை; விதையைப் பிளப்பவனும், உயிரைப் படைப்பவனுமான அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவ்வாறு எதையும் நான் அறிந்திருக்கவில்லை; ஒரு மனிதருக்கு அல்லாஹ் குர்ஆனில் அளிக் கின்ற விளக்கத்தையும் இந்த ஏட்டில் இருப்பதையும் தவிர” என்று பதிலளித்தார்கள். நான், ‘‘இந்த ஏட்டில் என்ன இருக்கிறது?”என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘உயிரீட்டுத் தொகை (பற்றிய சட்டம்), போர்க் கைதியை (எதிரிகளிடமிருந்து) விடுவிப்பது, மற்றும் எந்த முஸ்லிமையும் இறைமறுப்பாளனுக்குப் பதிலாகக் கொல்லக் கூடாது ஆகியவை” என்று பதிலளித்தார்கள்.159 அத்தியாயம் :
حدثنا احمد بن يونس، حدثنا زهير، حدثنا مطرف، ان عامرا، حدثهم عن ابي جحيفة رضى الله عنه قال قلت لعلي رضى الله عنه هل عندكم شىء من الوحى الا ما في كتاب الله قال والذي فلق الحبة وبرا النسمة ما اعلمه الا فهما يعطيه الله رجلا في القران، وما في هذه الصحيفة. قلت وما في الصحيفة قال العقل وفكاك الاسير، وان لا يقتل مسلم بكافر
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #3047
- Book Index
- 253
Grades
- -
