ஹதீஸ்கள்
#3042
ஸஹீஹ் அல்-புகாரீ - Fighting for the Cause of Allah
அபூஇஸ்ஹாக் அம்ர் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்களிடம் ஒரு மனிதர், ‘‘அபூஉமாராவே! ஹுனைன் போரின்போது நீங்கள் புறமுதுகிட்டு ஓடினீர்களா?” என்று கேட்டார். நான் கேட்டுக்கொண்டிருக்க, பராஉ (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களைப் பொறுத்த வரை அவர்கள் அன்று பின்வாங்கிச் செல்லவில்லை. அபூ சுஃப்யான் பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் அமர்ந்திருந்த கோவேறுக் கழுதையின் கடிவாளத்தைப் பிடித்துக்கொண்டிருந்தார்கள். இணைவைப்பாளர்கள் நபி (ஸல்) அவர்களைச் சூழ்ந்துகொண்டபோது, அவர்கள் (தம் வாகனத்திலிருந்து) இறங்கி, யிநான் இறைத்தூதர்தான். (இதில்) பொய் யில்லை. நான் அப்துல் முத்தலிபின் மகன்’ என்று (பாடியபடி) கூறினார்கள். அன்று நபி (ஸல்) அவர்களைவிடத் துணிச்சல் மிகுந்த எவரும் மக்களிடையே காணப்படவில்லை” என்று கூறினார்கள்.151 அத்தியாயம் :
حدثنا عبيد الله، عن اسراييل، عن ابي اسحاق، قال سال رجل البراء رضى الله عنه فقال يا ابا عمارة، اوليتم يوم حنين قال البراء وانا اسمع اما رسول الله صلى الله عليه وسلم لم يول يوميذ، كان ابو سفيان بن الحارث اخذا بعنان بغلته، فلما غشيه المشركون نزل، فجعل يقول انا النبي لا كذب، انا ابن عبد المطلب قال فما ريي من الناس يوميذ اشد منه
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #3042
- Book Index
- 248
Grades
- -
