ஹதீஸ்கள்
#3041
ஸஹீஹ் அல்-புகாரீ - Fighting for the Cause of Allah
சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் மதீனாவிலிருந்து ‘அல்ஃகாபா’வை நோக்கிச் செல்வதற்காகப் புறப்பட்டேன்.148 நான் அல்ஃகாபாவின் மலைப் பகுதியை அடைந்தபோது, அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களுடைய அடிமையொருவர் என்னைச் சந்தித்தார். நான், ‘‘உனக்குக் கேடுதான்! உமக்கு என்ன ஆயிற்று?” என்று கேட்டேன். அவர், ‘‘நபி (ஸல்) அவர்களின் பால் ஒட்டகங்கள் பிடித்துச் செல்லப்பட்டுவிட்ட”’ என்று கூறினார். நான், ‘‘அவற்றை யார் பிடித்துச் சென்றது?” என்று கேட்டேன். அதற்கு அவர், ‘‘கத்ஃபான் மற்றும் ஃபஸாரா குலத்தார்” என்று பதிலளித்தார். உடனே நான் மதீனாவின் இரு மலைகளுக்கிடையேயிருந்த அனைவருக் கும் கேட்கும்படி உரக்க சப்தமிட்டு, யிஉதவி! உதவி! அதிகாலை ஆபத்து! (யா ஸபாஹா!)› என்று மும்முறை கத்தினேன். பிறகு, விரைந்து சென்று அவர்களை அடைந்தேன். அவர்கள் (கொள்ளையடித்துச் சென்ற) ஒட்டகங்களைக் கையில் பிடித்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தனர். அவர்கள்மீது அம்பெய்யத் தொடங்கினேன். ‘‘அக்வஇன் மகன் நான்இன்று அற்பர்கள் (அழியும்) நாள்” என்று (பாடியபடி) கூறினேன். பிறகு அவர்கள் (தங்கள் கையிலிருந்த தண்ணீரை) அருந்துவதற்கு முன்னால் அவர்களிடமிருந்து அந்த ஒட்டகங்களை விடுவித்துவிட்டேன். பிறகு திரும்பிச் சென்றபோது நபி (ஸல்) அவர்கள் என் னைச் சந்தித்தார்கள். நான், ‘‘அல்லாஹ் வின் தூதரே! அந்தக் குலத்தார் தாகமாக இருந்தார்கள். அவர்கள் தண்ணீர்கூட அருந்தவிடாமல் அவர்களை நான் (அம் பெய்து) அவசரமாக ஓடவைத்துவிட்டேன். உடனே அவர்களைத் துரத்திச் சென்று பிடித்துவரப் படையனுப்புங்கள்” என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘அக்வஇன் மகனே! நீ அவர்களைத் தோற்கடித்துவிட்டாய். ஆகவே, மென்மையாக நடந்து கொள்! அந்தக் குழுவினர் (தம் சகாக்களைச் சென்றடைந்துவிட்டனர்; அங்கு) தம் குலத்தாரிடம் உபசரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்” என்று கூறினார்கள்.149 அத்தியாயம் :
حدثنا المكي بن ابراهيم، اخبرنا يزيد بن ابي عبيد، عن سلمة، انه اخبره قال خرجت من المدينة ذاهبا نحو الغابة، حتى اذا كنت بثنية الغابة لقيني غلام لعبد الرحمن بن عوف قلت ويحك، ما بك قال اخذت لقاح النبي صلى الله عليه وسلم. قلت من اخذها قال غطفان وفزارة. فصرخت ثلاث صرخات اسمعت ما بين لابتيها يا صباحاه، يا صباحاه. ثم اندفعت حتى القاهم وقد اخذوها، فجعلت ارميهم واقول انا ابن الاكوع، واليوم يوم الرضع، فاستنقذتها منهم قبل ان يشربوا، فاقبلت بها اسوقها، فلقيني النبي صلى الله عليه وسلم فقلت يا رسول الله، ان القوم عطاش، واني اعجلتهم ان يشربوا سقيهم، فابعث في اثرهم، فقال " يا ابن الاكوع، ملكت فاسجح. ان القوم يقرون في قومهم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #3041
- Book Index
- 247
Grades
- -
