ஹதீஸ்கள்
#3040
ஸஹீஹ் அல்-புகாரீ - Fighting for the Cause of Allah
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிடையே சிறந்த (நற்)குணமுடையவர் களாகவும் மக்களிலேயே அதிக கொடைக் குணம் உடையவர்களாகவும் மக்களிலேயே அதிக வீரமுடையவர்களாகவும் இருந் தார்கள். (ஒருமுறை) மதீனாவாசிகள் இரவு நேரத்தில் (எதிரிகள் படையெடுத்து வருவ தாகக் கேள்விப்பட்டுப்) பீதியடைந்தார்கள்; ஏதோ சப்தத்தையும் கேட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் தமது வாளைத் தொங்கவிட்டவர்களாக, அபூதல்ஹா (ரலி) அவர்களின் சேணம் பூட்டாத குதிரையின் மீது அமர்ந்த வண்ணம் மக்களை எதிர் கொண்டார்கள். அப்போது, ‘யிபயப்படாதீர்கள். பீதியடையாதீர்கள்” என்று (மக்களைப் பார்த்து) நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். பிறகு, ‘‘தங்குதடையின்றி வேகமாக ஓடக் கூடியதாக இந்தக் குதிரையை நாம் கண்டோம்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். அத்தியாயம் :
حدثنا قتيبة بن سعيد، حدثنا حماد، عن ثابت، عن انس رضى الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم احسن الناس، واجود الناس، واشجع الناس، قال وقد فزع اهل المدينة ليلة سمعوا صوتا، قال فتلقاهم النبي صلى الله عليه وسلم على فرس لابي طلحة عرى، وهو متقلد سيفه فقال " لم تراعوا، لم تراعوا ". ثم قال رسول الله صلى الله عليه وسلم " وجدته بحرا ". يعني الفرس
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #3040
- Book Index
- 246
Grades
- -
