ஹதீஸ்கள்
#3037
ஸஹீஹ் அல்-புகாரீ - Fighting for the Cause of Allah
அபூஹாஸிம் சலமா பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு (உஹுத் போரில்) ஏற்பட்ட காயத்திற்கு எதனால் சிகிச்சையளிக்கப்பட்டது?” என்று சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்களிடம் மக்கள் கேட்டனர். அதற்கு அவர்கள், ‘‘அதைப் பற்றி என்னைவிட அதிகமாக அறிந்தவர்கள் எவரும் (தற்போது) மக்களில் எஞ்சியிருக்கவில்லை. அலீ (ரலி) அவர்கள் தமது கேடயத்தில் தண்ணீர் கொண்டுவந்தார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முகத்திலிருந்து இரத்தத் தைக் கழுவிக்கொண்டிருந்தார்கள். (இறுதி யில் ஈச்சம்) பாய் ஒன்று எடுத்துவரப்பட்டு, கரிக்கப்பட்டது. அதைக் கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காயத்தில் வைத்து அழுத்தப்பட்டது” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
حدثنا علي بن عبد الله، حدثنا سفيان، حدثنا ابو حازم، قال سالوا سهل بن سعد الساعدي رضى الله عنه باى شىء دووي جرح النبي صلى الله عليه وسلم فقال ما بقي من الناس احد اعلم به مني، كان علي يجيء بالماء في ترسه، وكانت يعني فاطمة تغسل الدم عن وجهه، واخذ حصير فاحرق، ثم حشي به جرح رسول الله صلى الله عليه وسلم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #3037
- Book Index
- 243
Grades
- -
