ஹதீஸ்கள்
#3034
ஸஹீஹ் அல்-புகாரீ - Fighting for the Cause of Allah
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அகழ்ப் போரின்போது பார்த்தேன். அப்போது அவர்கள் (அகழ் வெட்டுவதற்காகத் தோண்டிய) மண்ணை எடுத்துச் சென்றுகொண்டிருந்தார்கள். அந்த மண், அவர்களுடைய மார்பின் முடியை மறைத்துவிட்டிருந்தது லிமேலும், நபி (ஸல்) அவர்கள் அதிகமான முடி யுடையவர்களாக இருந்தார்கள்லி அவர்கள் (கவிஞரான தம் தோழர்) அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்களின் (பின் வரும்) ஈரசைச்சீர் பாடலைப் பாடிக் கொண்டிருந்தார்கள்: இறைவா!நீ இல்லாவிட்டால்நாங்கள்நல்வழி அடைந்திருக்கமாட்டோம்தர்மம் செய்திருக்கமாட்டோம்தொழுதும் இருக்கமாட்டோம். எங்கள்மீதுபொழிவாயாக அமைதியை!(எதிரிகளை)நாங்கள் சந்திக்கும்போதுபாதங்களைஉறுதிப்படுத்துவாயாக! எதிரிகள்எங்களுக்குஅநீதியிழைத்துவிட்டனர்எங்களைச்சோதனையில் ஆழ்த்தஇவர்கள் விரும்பினாலும்இடம் தரமாட்டோம்! இதை நபி (ஸல்) அவர்கள் உரத்த குரலுடன் பாடிக்கொண்டிருந்தார்கள்.144 அத்தியாயம் :
حدثنا مسدد، حدثنا ابو الاحوص، حدثنا ابو اسحاق، عن البراء رضى الله عنه قال رايت النبي صلى الله عليه وسلم يوم الخندق وهو ينقل التراب حتى وارى التراب شعر صدره، وكان رجلا كثير الشعر وهو يرتجز برجز عبد الله اللهم لولا انت ما اهتدينا ولا تصدقنا ولا صلينا فانزلن سكينة علينا وثبت الاقدام ان لاقينا ان الاعداء قد بغوا علينا اذا ارادوا فتنة ابينا يرفع بها صوته
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #3034
- Book Index
- 241
Grades
- -
