ஹதீஸ்கள்
#3033
ஸஹீஹ் அல்-புகாரீ - Fighting for the Cause of Allah
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்முடன் உபை பின் கஅப் (ரலி) அவர்கள் இருக்க, (யூதச் சிறுவன்) இப்னு ஸய்யாதை நோக்கி நடந்தார்கள். இப்னு ஸய்யாத் ஒரு பேரீச்சந் தோட்டத்தில் இருப்பதாக நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பேரீச்சந் தோட்டத் தில் அவனிடம் நுழைந்தபோது (தாம் வருவதை அவன் அறியக் கூடாது என்பதற்காக) பேரீச்ச மரங்களின் அடிப் பகுதிகளால் தம்மை மறைத்துக்கொண்டு அவனை நோக்கி நடக்கலானார்கள். இப்னு ஸய்யாத் ஏதோ முணுமுணுத்தவ னாக ஒரு பூம்பட்டுப் போர்வையைப் போர்த்திக்கொண்டு படுத்திருந்தான். இப்னு ஸய்யாதின் தாய் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பார்த்துவிட்டாள். உடனே ‘‘ஸாஃபியே! இதோ முஹம்மத்!” என்று அவள் கூற, இப்னு ஸய்யாத் குதித்தெழுந்துவிட்டான். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘(நான் வருவதைத் தெரிவிக்காமல்) அவனை அவள் அப்படியே விட்டிருந்தால் அவன் (உண்மையை) வெளிப்படை யாகப் பேசியிருப்பான்” என்று சொன்னார்கள்.141 அத்தியாயம் :
قال الليث حدثني عقيل، عن ابن شهاب، عن سالم بن عبد الله، عن عبد الله بن عمر رضى الله عنهما انه قال انطلق رسول الله صلى الله عليه وسلم ومعه ابى بن كعب قبل ابن صياد، فحدث به في نخل، فلما دخل عليه رسول الله صلى الله عليه وسلم النخل، طفق يتقي بجذوع النخل، وابن صياد في قطيفة له فيها رمرمة، فرات ام ابن صياد رسول الله صلى الله عليه وسلم فقالت يا صاف، هذا محمد، فوثب ابن صياد، فقال رسول الله صلى الله عليه وسلم " لو تركته بين
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #3033
- Book Index
- 240
Grades
- -
