ஹதீஸ்கள்
#3022
ஸஹீஹ் அல்-புகாரீ - Fighting for the Cause of Allah
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்சாரிகளில் ஒரு குழுவினரை (யூதர் களின் தலைவரான) அபூராஃபிஉவிடம் அவரைக் கொல்வதற்காக அனுப்பினார் கள்.135 அவர்களில் ஒருவர் சென்று அவர்களின் கோட்டைக்குள் நுழைந்தார். அவர் கூறுகிறார்: நான் அவர்களுடைய ஊர்திப் பிராணிகளைக் கட்டிவைக்கும் (தொழுவம் போன்ற) இடத்தில் நுழைந் தேன். அவர்கள் கோட்டையின் வாயிலை மூடிவிட்டனர். பிறகு அவர்கள், தங்கள் கழுதையைக் காணாமல் அதைத் தேடிக் கொண்டு புறப்பட்டார்கள். நானும் அவர் களுடன் சேர்ந்து அதைத் தேடுபவனைப் போன்று காட்டிக்கொண்டு புறப்பட்டேன். அவர்கள் கழுதையைக் கண்டுபிடித்து விட்டார்கள். (பிறகு திரும்பி) கோட்டைக்குள் நுழைந்தார்கள். நானும் நுழைந்தேன். கோட்டைக் கதவை இரவில் மூடிவிட்டார் கள். (அதன்) சாவிகளை நான் பார்க்கும் வகையில் (கோட்டைச் சுவரிலிருந்த) ஒரு மாடத்தில் வைத்தார்கள். அவர்கள் தூங்கியவுடன் நான் அந்தச் சாவிகளை எடுத்துக் கோட்டைக் கதவைத் திறந்தேன். பிறகு அபூராஃபிஉவிடம் சென்று, ‘அபூராஃபிஉவே!› என்று அழைத்தேன். அவன் எனக்குப் பதிலளித்தான். குரல் வந்த திசையை நோக்கிச் சென்று அவனைத் தாக்கினேன். அவன் கூச்சலிட் டான். உடனே நான் அங்கிருந்து வெளியேறிவிட்டேன். பிறகு (அவனைக்) காப்பாற்ற வந்த வனைப் போன்று மீண்டும் அவனிடம் திரும்பிச் சென்று, ‘‘அபூராஃபிஉவே!” என்று என் குரலை மாற்றிக்கொண்டு அவனை அழைத்தேன். அவன், ‘‘உனக் கென்ன நேர்ந்தது? உன் தாய்க்குக் கேடுதான்” என்று சொன்னான். நான், ‘‘உனக்கு என்ன ஆயிற்று?” என்று கேட்டேன். அவன், ‘‘என்னிடம் யார் வந்தது என்று எனக்குத் தெரியவில்லை. அவன் என்னைத் தாக்கிவிட்டான்” என்று கூறினான். உடனே நான், அவனது வயிற்றில் என் வாளை வைத்து (சிரமப்பட்டு)அழுத்தினேன். அது (அவனது வயிற்றுக் குள் சென்று) அவனது எலும்பில் இடித்தது. பிறகு நான் (எப்படி வெளியேறுவது என்ற) திகைப்புடன் வெளியே வந்தேன். அவர்களின் ஏணி ஒன்றின் வழியாக இறங்குவதற்காக வந்தேன். அப்போது கீழே விழுந்துவிட்டேன்; என் கால் சுளுக்கிக்கொண்டது. நான் என் தோழர்களிடம் சென்று, ‘‘(அவனது மரணத்தையறிந்து அவனது வீட்டார்) ஓலமிடும் சப்தத்தைக் கேட்காத வரை நான் இங்கிருந்து நகரமாட்டேன்” என்று கூறினேன். ஹிஜாஸ் பகுதியின் (பெரும்) வணிகரான அபூராஃபிஉ (உடைய மரணத்து)க்காக அவனுடைய வீட்டார் எழுப்பிய ஓலங்களைச் கேட்கும்வரை அந்த இடத்தை விட்டு நான் செல்லவில்லை. பிறகு எந்த வேதனையுமின்றி எழுந்தேன். இறுதியில், நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்று நடந்ததை அவர்களுக்குத் தெரிவித் தோம். அத்தியாயம் :
حدثنا علي بن مسلم، حدثنا يحيى بن زكرياء بن ابي زايدة، قال حدثني ابي، عن ابي اسحاق، عن البراء بن عازب رضى الله عنهما قال بعث رسول الله صلى الله عليه وسلم رهطا من الانصار الى ابي رافع ليقتلوه، فانطلق رجل منهم فدخل حصنهم قال فدخلت في مربط دواب لهم، قال واغلقوا باب الحصن، ثم انهم فقدوا حمارا لهم، فخرجوا يطلبونه، فخرجت فيمن خرج اريهم انني اطلبه معهم، فوجدوا الحمار، فدخلوا ودخلت، واغلقوا باب الحصن ليلا، فوضعوا المفاتيح في كوة حيث اراها، فلما ناموا اخذت المفاتيح، ففتحت باب الحصن ثم دخلت عليه فقلت يا ابا رافع. فاجابني، فتعمدت الصوت، فضربته فصاح، فخرجت ثم جيت، ثم رجعت كاني مغيث فقلت يا ابا رافع، وغيرت صوتي، فقال ما لك لامك الويل قلت ما شانك قال لا ادري من دخل على فضربني. قال فوضعت سيفي في بطنه، ثم تحاملت عليه حتى قرع العظم، ثم خرجت وانا دهش، فاتيت سلما لهم لانزل منه فوقعت فوثيت رجلي، فخرجت الى اصحابي فقلت ما انا ببارح حتى اسمع الناعية، فما برحت حتى سمعت نعايا ابي رافع تاجر اهل الحجاز. قال فقمت وما بي قلبة حتى اتينا النبي صلى الله عليه وسلم فاخبرناه
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #3022
- Book Index
- 231
Grades
- -
