ஹதீஸ்கள்
#3000
ஸஹீஹ் அல்-புகாரீ - Fighting for the Cause of Allah
அஸ்லம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுடன் மக்கா (செல்லும்) சாலையில் இருந்தேன். அப்போது அவர்களுக்கு (அன்னாரின் துணைவியார்) ஸஃபிய்யா பின்த் அபீஉபைத் (ரலி) அவர்கள் கடுமையான (நோயின்) வேதனையில் இருப்பதாகச் செய்தி எட்டியது. உடனே அவர்கள் விரைந்து பயணம் செய்யலானார்கள். செம்மேகம் மறைந்தபின் (வாகனத்திலிருந்து) இறங்கி மஃக்ரிபையும் இஷாவையும் சேர்த்துத் தொழுதார்கள். மேலும், ‘‘நபி (ஸல்) அவர்கள் விரைந்து பயணம் செல்ல நேரிடும்போது மஃக்ரிபைத் தாமதப்படுத்தி, மஃக்ரிபையும் இஷாவையும் (இஷா நேரத்தில்) சேர்த்துத் தொழுவதை நான் பார்த்திருக்கிறேன்” என்று கூறி னார்கள்.117 அத்தியாயம் :
حدثنا سعيد بن ابي مريم، اخبرنا محمد بن جعفر، قال اخبرني زيد هو ابن اسلم عن ابيه، قال كنت مع عبد الله بن عمر رضى الله عنهما بطريق مكة، فبلغه عن صفية بنت ابي عبيد شدة وجع، فاسرع السير حتى اذا كان بعد غروب الشفق، ثم نزل فصلى المغرب والعتمة، يجمع بينهما، وقال اني رايت النبي صلى الله عليه وسلم اذا جد به السير اخر المغرب وجمع بينهما
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #3000
- Book Index
- 209
Grades
- -
