ஹதீஸ்கள்
#2999
ஸஹீஹ் அல்-புகாரீ - Fighting for the Cause of Allah
உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களிடம் விடைபெறும் ஹஜ்ஜின்போது (அரஃபா விலிருந்து முஸ்தலிஃபா திரும்பும்போது) நபி (ஸல்) அவர்களின் பயண வேகம் குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘‘நபி (ஸல்) அவர்கள் மிதமான வேகத்தில் செல்பவர்களாக இருந்தார்கள். (மக்கள் நெரிசல் இல்லாத) விசாலமான இடைவெளியைக் கண்டால் விரைவாகச் செல்வார்கள்” என்று பதிலளித்துவிட்டு, ‘‘விரைவு (நஸ்ஸு) என்பது, மிதமான வேகத்தைவிட அதிகமாக உள்ள வேகத் தைக் குறிக்கும்” என்று உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறினார்கள்.116 அறிவிப்பாளர் யஹ்யா அல்கத்தான் (ரஹ்) அவர்கள், ‘‘எனக்கு இதை அறிவித்த உர்வா (ரஹ்) அவர்கள், யிநான் உசாமா (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்ட இந்தக் கேள்வியை நேரடியாகச் செவியுற்றுக் கொண்டிருந்தேன்’ என்று கூறினார்கள். ஆனால், அதை நான் (ஆரம்பத்தில்) சொல்ல மறந்துவிட்டேன்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا محمد بن المثنى، حدثنا يحيى، عن هشام، قال اخبرني ابي قال، سيل اسامة بن زيد رضى الله عنهما كان يحيى يقول وانا اسمع فسقط عني عن مسير النبي صلى الله عليه وسلم في حجة الوداع، قال فكان يسير العنق، فاذا وجد فجوة نص. والنص فوق العنق
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #2999
- Book Index
- 208
Grades
- -
