ஹதீஸ்கள்
#2997
ஸஹீஹ் அல்-புகாரீ - Fighting for the Cause of Allah
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் அகழ்ப் போரின் போது (யிஇரவில் தனியாகச் சென்று எதிரிகளை உளவு பார்ப்பதற்கு முன் வருபவர் யார்?› என்று மக்களை) அழைத்தார்கள். அப்போது ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்கள் முன்வந்தார்கள். மீண்டும் மக்களை அழைத்தார்கள். (அப்போதும்) ஸுபைர் (ரலி) அவர்களே முன்வந்தார்கள். மீண்டும் மக்களை அழைத்தார்கள். (மீண்டும்) ஸுபைர் (ரலி) அவர்களே முன்வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘ஒவ்வோர் இறைத்தூதருக்கும் (பிரத்யேகமான) உதவியாளர் ஒருவர் உண்டு; என் (பிரத்யேக) உதவியாளர் ஸுபைர் ஆவார்” என்று கூறினார்கள்.113 சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள், ‘‘மூலத்தில் இடம்பெற்றுள்ள யிஹவாரீ’ என்பது உதவியாளரைக் குறிக்கும்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا الحميدي، حدثنا سفيان، حدثنا محمد بن المنكدر، قال سمعت جابر بن عبد الله رضى الله عنهما يقول ندب النبي صلى الله عليه وسلم الناس يوم الخندق، فانتدب الزبير، ثم ندبهم فانتدب الزبير، ثم ندبهم فانتدب الزبير، قال النبي صلى الله عليه وسلم " ان لكل نبي حواريا، وحواري الزبير ". قال سفيان الحواري الناصر
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #2997
- Book Index
- 206
Grades
- -
