ஹதீஸ்கள்
#2995
ஸஹீஹ் அல்-புகாரீ - Fighting for the Cause of Allah
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜிலிருந்தோ உம்ராவிலிருந்தோ லிஅல்லது அறப்போரிலிருந்தோலி திரும்பும்போது, ஒரு குன்றில் அல்லது ஒரு மேட்டில் ஏறும்போதெல்லாம் மூன்றுமுறை, ‘அல்லாஹு அக்பர்’ (அல்லாஹ் மிகப்பெரியவன்) என்று கூறுவார்கள். பிறகு பின்வருமாறு கூறுவார்கள்: லா இலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, லஹுல் முல்க், வ லஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். ஆயிபூன, தாயிபூன, ஆபிதூன, சாஜிதூன லி ரப்பினா, ஹாமிதூன, ஸதகல்லாஹு வ அதஹு; வ நஸர அப்தஹு; வ ஹஸமல் அஹ்ஸாப வஹ்தஹு. (பொருள்: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. அவன் தனித்த வன். அவனுக்கு இணையானவர் எவரு மில்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கே புகழனைத்தும் உரியன. அவன் அனைத்தின்மீதும் ஆற்றல் பெற்றவன். பாவமன்னிப்புக் கோரி மீண்டவர்களாகவும், (அவனை) வழிபட்டவர்களாகவும், எங்கள் இறைவனுக் குச் சிரம்பணிந்தவர்களாகவும், அவனைப் புகழ்ந்தவர்களாகவும் நாங்கள் திரும்பு கிறோம். அல்லாஹ் தன் வாக்குறுதியை மெய்ப்படுத்திவிட்டான்; தன் அடியாருக்கு உதவி செய்துவிட்டான்; கூட்டுப்படை களைத் தன்னந்தனியாக நின்று தோற்கடித்துவிட்டான்) அறிவிப்பாளர்களில் ஒருவரான ஸாலிஹ் பின் கைசான் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: நான் (எனக்கு இந்த ஹதீஸை அறிவித்த) சாலிம் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்களிடம், ‘‘(ஆயிபூன என்பதற்குப்பின்) இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால் திரும்புகிறோம்) என்று அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறவில்லையா?” என்று கேட்டேன். அவர்கள் யிஇல்லை’ என்றார்கள். அத்தியாயம் :
حدثنا عبد الله، قال حدثني عبد العزيز بن ابي سلمة، عن صالح بن كيسان، عن سالم بن عبد الله، عن عبد الله بن عمر رضى الله عنهما قال كان النبي صلى الله عليه وسلم اذا قفل من الحج او العمرة ولا اعلمه الا قال الغزو يقول كلما اوفى على ثنية او فدفد كبر ثلاثا ثم قال " لا اله الا الله، وحده لا شريك له، له الملك، وله الحمد، وهو على كل شىء قدير، ايبون تايبون عابدون ساجدون لربنا حامدون، صدق الله وعده، ونصر عبده، وهزم الاحزاب وحده ". قال صالح فقلت له الم يقل عبد الله ان شاء الله قال لا
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #2995
- Book Index
- 204
Grades
- -
