ஹதீஸ்கள்
#2992
ஸஹீஹ் அல்-புகாரீ - Fighting for the Cause of Allah
அபூமூசா அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (கைபர் பயணத்தில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந் தோம். நாங்கள் ஒரு பள்ளத்தாக்கில் ஏறும் போது, யிலா இலாஹ இல்லல்லாஹ்’ (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவ னில்லை) என்றும் ‘அல்லாஹு அக்பர்’ (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்றும் கூறிவந்தோம். (ஒரு கட்டத்தில்) எங்கள் குரல்கள் உயர்ந்துவிட்டன. அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘மக்களே! உங்களைக் கட்டுப்படுத்திக் கொள் ளுங்கள். (மெதுவாகக் கூறுங்கள்.) ஏனெனில், நீங்கள் காது கேட்காதவனையோ, இங்கு இல்லாதவனையோ அழைப்பதில்லை. அவன் உங்களுடனேயே இருக்கின்றான். அவன் செவியுறுபவன்; அருகிலிருப்பவன். (இறைவனான) அவனது திருப்பெயர் வளமானது. அவனது புகழ் உயர்ந்தது” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا محمد بن يوسف، حدثنا سفيان، عن عاصم، عن ابي عثمان، عن ابي موسى الاشعري رضى الله عنه قال كنا مع رسول الله صلى الله عليه وسلم، فكنا اذا اشرفنا على واد هللنا وكبرنا ارتفعت اصواتنا، فقال النبي صلى الله عليه وسلم " يا ايها الناس، اربعوا على انفسكم، فانكم لا تدعون اصم ولا غايبا، انه معكم، انه سميع قريب، تبارك اسمه وتعالى جده
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #2992
- Book Index
- 201
Grades
- -
