ஹதீஸ்கள்
#2991
ஸஹீஹ் அல்-புகாரீ - Fighting for the Cause of Allah
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் கைபருக்குக் காலை நேரத்தில் வந்துசேர்ந்தார்கள். அப்போது அங்குள்ள மக்கள், தங்கள் கழுத்துகளில் மண்வெட்டிகளை மாட்டிக் கொண்டு (வயல்வெளிகளுக்குப்) புறப்பட்டுவிட்டிருந்தார்கள். நபி (ஸல்) அவர்களைப் பார்த்ததும், ‘‘முஹம்மதும் (அவருடைய) ஐந்து அணிகள் கொண்ட படையினரும் (வந்துள்ளனர்). முஹம்மதும் (அவருடைய) ஐந்து அணிகள் கொண்ட படையினரும் (வந்துள்ளனர்)” என்று கூறினர். உடனே கோட்டைக்குச் சென்று அடைக்கலம் புகுந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் தம் இரு கைகளையும் உயர்த்தி, ‘‘அல்லாஹ் மிகப் பெரியவன் (அல்லாஹு அக்பர்). கைபர் பாழாகிவிட்டது. நாம் ஒரு சமுதாயத்தாரின் (போர்க்) களத்தில் இறங்கிவிட்டோமென்றால் எச்சரிக்கப்பட்ட அம்மக்களுக்கு அது கெட்ட காலையாகவே அமையும்” என்று கூறினார்கள். எங்களுக்கு (நாட்டு)க் கழுதைகள் சில கிடைக்கவே அவற்றை நாங்கள் (அறுத்து) சமைத்தோம். நபி (ஸல்) அவர்களின் அறிவிப்பாளர், ‘‘அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் (நாட்டுக்) கழுதை களின் இறைச்சிகளை உண்ணத் தடை விதிக்கிறார்கள்” என்று (உரக்கக்) கூவி அறிவித்தார். உடனே பாத்திரங்கள் அவற்றிலிருந்த இறைச்சிகளுடனேயே கவிழ்க்கப்பட்டுவிட்டன.112 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا عبد الله بن محمد، حدثنا سفيان، عن ايوب، عن محمد، عن انس رضى الله عنه قال صبح النبي صلى الله عليه وسلم خيبر وقد خرجوا بالمساحي على اعناقهم، فلما راوه قالوا هذا محمد والخميس، محمد والخميس. فلجيوا الى الحصن، فرفع النبي صلى الله عليه وسلم يديه وقال " الله اكبر، خربت خيبر، انا اذا نزلنا بساحة قوم فساء صباح المنذرين ". واصبنا حمرا فطبخناها، فنادى منادي النبي صلى الله عليه وسلم ان الله ورسوله ينهيانكم عن لحوم الحمر، فاكفيت القدور بما فيها. تابعه علي عن سفيان رفع النبي صلى الله عليه وسلم يديه
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #2991
- Book Index
- 200
Grades
- -
