ஹதீஸ்கள்
#2988
ஸஹீஹ் அல்-புகாரீ - Fighting for the Cause of Allah
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின்போது, தம் வாகனத்தின் மீது உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களை அமரவைத்துக்கொண்டு மக்காவின் மேற்பகுதியிலிருந்து முன்னேறிச் சென்றார்கள். அப்போது அவர்களுடன் பிலால் (ரலி) அவர்களும் கஅபாவின் பொறுப்பாளர்களில் ஒருவரான உஸ்மான் பின் தல்ஹா (ரலி) அவர்களும் இருந்தனர். இறுதியில், நபி (ஸல்) அவர்கள் (தமது வாகனத்தை) பள்ளிவாசலில் மண்டியிட்டு அமரச் செய்தார்கள். பிறகு இறையில்லம் கஅபாவின் சாவியைக் கொண்டுவரும்படி உஸ்மான் பின் தல்ஹா (ரலி) அவர்களுக்கு உத்தரவிட்டார்கள். (சாவி கொண்டு வரப்பட்டதும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கஅபாவைத் திறந்து கொண்டு உசாமா (ரலி), பிலால் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோருடன் உள்ளே நுழைந்தார்கள். அங்கே பகலில் நீண்ட நேரம் தங்கியிருந்தார்கள். பிறகு வெளியே வந்தார்கள். மக்கள் (கஅபாவினுள் நுழைய) ஒருவரோ டொருவர் போட்டியிட்டனர். நான்தான் (அதனுள்) முதலில் நுழைந்தவன். அப்போது பிலால் (ரலி) அவர்களை வாசலின் பின்னே நின்றுகொண்டிருக்கக் கண்டேன். அப்போது பிலால் (ரலி) அவர்களிடம், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கே தொழுதார்கள்?” என்று கேட்டேன். பிலால் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் தொழுத இடத்தைச் சுட்டிக்காட்டினார்கள். நான் அவர்களிடம், ‘‘எத்தனை ரக்அத்கள் நபி (ஸல்) அவர்கள் தொழுதார்கள்?” என்று கேட்க மறந்துவிட்டேன்.109 அத்தியாயம் :
حدثنا يحيى بن بكير، حدثنا الليث، قال يونس اخبرني نافع، عن عبد الله رضى الله عنه ان رسول الله صلى الله عليه وسلم اقبل يوم الفتح من اعلى مكة على راحلته، مردفا اسامة بن زيد ومعه بلال ومعه عثمان بن طلحة من الحجبة، حتى اناخ في المسجد، فامره ان ياتي بمفتاح البيت، ففتح ودخل رسول الله صلى الله عليه وسلم ومعه اسامة وبلال وعثمان، فمكث فيها نهارا طويلا ثم خرج، فاستبق الناس، وكان عبد الله بن عمر اول من دخل، فوجد بلالا وراء الباب قايما، فساله اين صلى رسول الله صلى الله عليه وسلم فاشار له الى المكان الذي صلى فيه، قال عبد الله فنسيت ان اساله كم صلى من سجدة
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #2988
- Book Index
- 197
Grades
- -
