ஹதீஸ்கள்
#2969
ஸஹீஹ் அல்-புகாரீ - Fighting for the Cause of Allah
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை, எதிரிகள் படையெடுத்து வருவதாக மதீனா நகர) மக்கள் பீதிக்குள்ளானார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அபூதல்ஹா (ரலி) அவர்களுக்குச் சொந்தமான மெதுவாக நடக்கக்கூடிய குதிரை ஒன்றில் ஏறிக்கொண்டு, (அதை) உதைத்துப் பாய்ந்தோடச் செய்தபடி தனியாகப் புறப்பட்டார்கள். அவர்களுக்குப் பின்னால் மக்களும் (வாகனங்களில்) ஏறிப் பாய்ந்து சென்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘பீதியடையாதீர்கள். (பீதியடையும்படி யாரும் படையெடுத்து வரவில்லை.) இந்தக் குதிரை தங்குதடையின்றி வேகமாக ஓடக்கூடியதாக உள்ளது” என்று கூறினார்கள். அந்த நாளுக்குப் பிறகு, அந்தக் குதிரையை யாராலும் முந்த முடிய வில்லை. அத்தியாயம் :
حدثنا الفضل بن سهل، حدثنا حسين بن محمد، حدثنا جرير بن حازم، عن محمد، عن انس بن مالك رضى الله عنه قال فزع الناس فركب رسول الله صلى الله عليه وسلم فرسا لابي طلحة بطييا، ثم خرج يركض وحده، فركب الناس يركضون خلفه، فقال " لم تراعوا، انه لبحر ". فما سبق بعد ذلك اليوم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #2969
- Book Index
- 178
Grades
- -
