ஹதீஸ்கள்
#2967
ஸஹீஹ் அல்-புகாரீ - Fighting for the Cause of Allah
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஓர் அறப்போருக்குச் சென்றேன். களைப்படைந்து நடக்க முடியாமல் போய்க்கொண்டிருந்த நீர் சுமக்கும் ஒட்டகம் ஒன்றின் மீது அமர்ந்து சென்றுகொண்டிருந்தபோது நபி (ஸல்) அவர்கள் என்னை வந்தடைந்தார்கள். அப்போது என்னிடம், ‘‘உமது ஒட்டகத்திற்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். நான், ‘‘அது களைப்படைந்துவிட்டது” என்று பதிலளித்தேன். அதைக் கேட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சற்றுப் பின்தங்கி அதை அதட்டி அதற்காக துஆ செய்தார்கள். உடனே அது தனக்குமுன் சென்றுகொண்டிருந்த ஒட்டகங்களை முந்திக்கொண்டு செல்லத் தொடங்கியது. நபி (ஸல்) அவர்கள் என்னிடம், ‘‘உமது ஒட்டகத்தை இப்போது எப்படிக் காண்கிறீர்?” என்று கேட்டார்கள். நான், ‘‘நல்ல நிலையில் காண்கிறேன். அது தங்களின் வளத்தை (பரக்கத்தை)ப் பெற்றுக்கொண்டுவிட்டது” என்று சொன்னேன். உடனே அவர்கள், ‘‘நீர் அதை எனக்கு விற்றுவிடுகிறீரா?” என்று கேட்டார்கள். நான் (பதில் சொல்ல) வெட்கப்பட்டேன். (ஏனெனில்,) எங்களிடம் அதைத் தவிர நீர் சுமக்கும் ஒட்டகம் வேறெதுவும் இருக்கவில்லை. ஆயினும் நான், ‘‘சரி (விற்றுவிடுகிறேன்)” என்று பதிலளித் தேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘அப்படியாயின் அதை எனக்கு விற்றுவிடுவீராக!” என்று கூற, நான் அதன் மீது பயணம் செய்து மதீனாவைச் சென்றடைய என்னை அனு மதிக்க வேண்டும் என்னும் நிபந்தனையின் பேரில் அவர்களுக்கு அந்த ஒட்டகத்தை விற்றுவிட்டேன். நான் அவர்களிடம், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் புதிதாகத் திருமணமானவன்” என்று சொல்லி (ஊருக்கு விரைவாகச் செல்ல) அனுமதி கேட்டேன். அவர்கள் எனக்கு அனுமதியளித்தார்கள். ஆகவே, நான் மற்ற மக்களைவிட முன்னதாகச் சென்று மதீனாவை அடைந்துவிட்டேன். அப்போது என்னை என் தாய்மாமன் (ஜத்து பின் கைஸ்) சந்தித்து ஒட்டகத்தைப் பற்றிக் கேட்டார். நான் அதை விற்றுவிட்டதை அவருக்குத் தெரிவித்தேன். அதற்காக அவர் என்னைக் குறை கூறினார். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் மதீனாவுக்கு விரைவாகச் செல்ல அனுமதி கேட்டபோது அவர்கள் என்னிடம், ‘‘நீ கன்னிப் பெண்ணை மணமுடித்துக் கொண்டாயா? கன்னி கழிந்த பெண்ணை மணமுடித்துக்கொண்டாயா?” என்று கேட்டிருந்தார்கள். அதற்கு நான், ‘‘கன்னி கழிந்த ஒரு பெண்ணைத்தான் மணமுடித்துக்கொண்டேன்” என்று பதில் கூறினேன். அதற்கு அவர்கள், ‘‘கன்னிப் பெண்ணை மணமுடித்திருக்கக் கூடாதா? நீ அவளுடனும் அவள் உன்னுடனும் கொஞ்சிக் குலவி மகிழ்ந்திருக்கலாமே!” என்று கூறினார்கள். நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! எனக்குச் சிறு வயதில் சகோதரிகள் பலர் இருக்கும் நிலையில்தான் என் தந்தை (உஹுத் போரில்) மரணித்துவிட்டார்கள் லிஅல்லது கொல்லப்பட்டுவிட்டார்கள்.லி ஆகவே, அவர்களுக்கு ஒழுக்கம் கற்பிக்கவும் அவர்களைப் பராமரிக்கவும் இயலாத அவர்களைப் போன்றே (அனுப வமற்ற சிறு வயதுப் பெண்) ஒருத்தியை நான் மணந்துகொள்ள விரும்பவில்லை. ஆகவே, அவர்களைப் பராமரிப்பதற்காக வும் அவர்களுக்கு ஒழுக்கம் கற்பிப்பதற் காகவும் (வாழ்ந்த அனுபவமுள்ள) கன்னி கழிந்த ஒரு பெண்ணையே மணந்து கொண்டேன்” என்று பதிலளித்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்து சேர்ந்தபோது, காலை யில் ஒட்டகத்துடன் அவர்களிடம் சென்றேன். எனக்கு அதன் விலையைக் கொடுத்தார்கள். பிறகு அந்த ஒட்டகத்தை யும் என்னிடமே திருப்பிக் கொடுத்துவிட் டார்கள். ‘‘(யிமதீனாவரை பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும்’ என்பது போன்ற) இத்தகைய நிபந்தனையுடன் விற்பது நமது சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது; இதில் தவறேதும் இருப்பதாக நான் கருதவில்லை” என்று அறிவிப்பாளர்களில் ஒருவரான (அறிஞர்) முஃகீரா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். அத்தியாயம் :
حدثنا اسحاق بن ابراهيم، اخبرنا جرير، عن المغيرة، عن الشعبي، عن جابر بن عبد الله رضى الله عنهما قال غزوت مع رسول الله صلى الله عليه وسلم قال فتلاحق بي النبي صلى الله عليه وسلم وانا على ناضح لنا قد اعيا فلا يكاد يسير فقال لي " ما لبعيرك ". قال قلت عيي. قال فتخلف رسول الله صلى الله عليه وسلم فزجره ودعا له، فما زال بين يدى الابل قدامها يسير. فقال لي " كيف ترى بعيرك ". قال قلت بخير قد اصابته بركتك. قال " افتبيعنيه ". قال فاستحييت، ولم يكن لنا ناضح غيره، قال فقلت نعم. قال " فبعنيه ". فبعته اياه على ان لي فقار ظهره حتى ابلغ المدينة. قال فقلت يا رسول الله اني عروس، فاستاذنته فاذن لي، فتقدمت الناس الى المدينة حتى اتيت المدينة، فلقيني خالي فسالني عن البعير، فاخبرته بما صنعت فيه فلامني، قال وقد كان رسول الله صلى الله عليه وسلم قال لي حين استاذنته " هل تزوجت بكرا ام ثيبا ". فقلت تزوجت ثيبا. فقال " هلا تزوجت بكرا تلاعبها وتلاعبك ". قلت يا رسول الله توفي والدي او استشهد ولي اخوات صغار، فكرهت ان اتزوج مثلهن، فلا تودبهن، ولا تقوم عليهن، فتزوجت ثيبا لتقوم عليهن وتودبهن. قال فلما قدم رسول الله صلى الله عليه وسلم المدينة غدوت عليه بالبعير، فاعطاني ثمنه، ورده على. قال المغيرة هذا في قضاينا حسن لا نرى به باسا
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #2967
- Book Index
- 176
Grades
- -
