ஹதீஸ்கள்
#2964
ஸஹீஹ் அல்-புகாரீ - Fighting for the Cause of Allah
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: இன்று என்னிடம் ஒரு மனிதர் வந்து, ஒரு விஷயம் குறித்து கேட்டார். அவருக்கு என்ன பதில் கூறுவது என்பது எனக்குத் தெரியவில்லை. அவர், ‘‘ஆயுத பாணியான, செயல் வேகமுள்ள ஒருவர் தம் தலைவர்களுடன் அறப்போருக்குச் செல்கிறார். அப்போது தலைவர், அவரால் செய்ய முடியாத சில விஷயங்களைச் செய்யும்படி வற்புறுத்துகிறார் எனில் அவர் என்ன செய்வது?” என்று கேட்டார். நான், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களுக்கு என்ன (பதில்) சொல்வதென்பது எனக்குத் தெரியவில்லை. ஆயினும், நாங்கள் (இத்தகைய அறப்போர்களில்) நபி (ஸல்) அவர்களுடன் இருந்திருக்கி றோம். அப்போதெல்லாம் அவர்கள் ஒரு விஷயத்தை ஒருமுறைதான் உத்தரவிடு வார்கள். நாங்கள் அதைச் செய்து விடுவோம். நீங்கள் அல்லாஹ்வை அஞ்சி நடக்கும்வரை நன்மையில் இருப்பீர்கள். உங்கள் உள்ளத்தில் சந்தேகம் ஏதும் ஏற்பட்டால் (விஷயமறிந்த) யாரிடமாவது கேளுங்கள். அவர், உங்கள் (நெருடலை நீக்கி) சந்தேகத்தை நிவர்த்தி செய்யக் கூடும். (இனிவரும் காலங்களில்) அத்தகைய (தகுதி வாய்ந்த ஒரு)வரை நீங்கள் அடைய முடியாமலும் போகக்கூடும். யாரைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அவன் மீதாணையாக! இந்த உலகத்தில் போனது போக எஞ்சியிருப்பவற்றை, தூய நீர் குடிக்கப்பட்டு கசடுகள் மட்டும் எஞ்சி (தேங்கி நின்று)விட்ட ஒரு குட்டையாகவே நான் கருதுகின்றேன்” என்று கூறினேன். அத்தியாயம் :
حدثنا عثمان بن ابي شيبة، حدثنا جرير، عن منصور، عن ابي وايل، قال قال عبد الله رضى الله عنه لقد اتاني اليوم رجل فسالني عن امر ما دريت ما ارد عليه، فقال ارايت رجلا موديا نشيطا، يخرج مع امراينا في المغازي، فيعزم علينا في اشياء لا نحصيها. فقلت له والله ما ادري ما اقول لك الا انا كنا مع النبي صلى الله عليه وسلم فعسى ان لا يعزم علينا في امر الا مرة حتى نفعله، وان احدكم لن يزال بخير ما اتقى الله، واذا شك في نفسه شىء سال رجلا فشفاه منه، واوشك ان لا تجدوه، والذي لا اله الا هو ما اذكر ما غبر من الدنيا الا كالثغب شرب صفوه وبقي كدره
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #2964
- Book Index
- 174
Grades
- -
