ஹதீஸ்கள்
#2963
ஸஹீஹ் அல்-புகாரீ - Fighting for the Cause of Allah
முஜாஷிஉ பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நானும் என் சகோதரரும் நபி (ஸல்) அவர்களிடம் சென்றோம். நான் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘புலம்பெயர்ந்து செல்ல (ஹிஜ்ரத்) எங்களிடம் உறுதிமொழி வாங்குங்கள்” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘ஹிஜ்ரத் (அதற்குரிய வேளையில்) அதற்குரியவர்களுக்கு (கடமையாகி) நடந்து முடிந்துவிட்டது” என்று பதிலளித்தார்கள். நான், ‘‘(இனி) வேறெதற்காகத் தாங்கள் எங்களிடம் உறுதிமொழி வாங்குவீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘இஸ்லாம், அறப்போர் ஆகியவற்றுக்காக (உறுதிமொழி வாங்குவேன்)” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
حدثنا اسحاق بن ابراهيم، سمع محمد بن فضيل، عن عاصم، عن ابي عثمان، عن مجاشع رضى الله عنه قال اتيت النبي صلى الله عليه وسلم انا واخي فقلت بايعنا على الهجرة. فقال " مضت الهجرة لاهلها ". فقلت علام تبايعنا قال " على الاسلام والجهاد
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #2963
- Book Index
- 173
Grades
- -
