ஹதீஸ்கள்
#2960
ஸஹீஹ் அல்-புகாரீ - Fighting for the Cause of Allah
சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (யிஇறைமறுப்பாளர்களுடன் அறப்போர் புரிவேன்; இறைவழியில் துன்பங்களைச் சகிப்பேன்’ என்று) நபி (ஸல்) அவர்களிடம் (ஹுதைபியாவில்) உறுதிமொழியளித்தேன்; பிறகு மரத்தின் நிழலில் (சற்று) ஒதுங்கினேன். (நபி (ஸல்) அவர்களைச் சுற்றிலுமிருந்த) மக்கள் (கூட்டம்) சற்று குறைந்தபோது நபி (ஸல்) அவர்கள், ‘‘அக்வஉ உடைய மகனே! (சலமாவே!) நீர் உறுதிமொழியளிக்க வில்லையா?” என்று கேட்டார்கள். ‘‘நான் ஏற்கெனவே உறுதிமொழியளித்து விட்டேன், அல்லாஹ்வின் தூதரே!” என்று பதிலளித்தேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘மீண்டும் (அளிப்பீராக!)” என்று கூறினார்கள். ஆகவே, நான் இரண்டாவது முறையாக உறுதிமொழியளித்தேன். அறிவிப்பாளர் யஸீத் பின் அபீ உபைத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (இதை எனக்கு அறிவித்த சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்களிடம்) நான், ‘‘அபூமுஸ்லிமே! அன்று (நபித்தோழர்களான) நீங்கள் எந்த விஷயத்திற்காக (நபி (ஸல்) அவர்களிடம்) உறுதிமொழியளித்தீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘மரணத்தைச் சந்திக்கவும் தயாராயிருப்பதாக நாங்கள் உறுதிமொழியளித்தோம்” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
حدثنا المكي بن ابراهيم، حدثنا يزيد بن ابي عبيد، عن سلمة رضى الله عنه قال بايعت النبي صلى الله عليه وسلم ثم عدلت الى ظل الشجرة، فلما خف الناس قال " يا ابن الاكوع، الا تبايع ". قال قلت قد بايعت يا رسول الله. قال " وايضا ". فبايعته الثانية،. فقلت له يا ابا مسلم، على اى شىء كنتم تبايعون يوميذ قال على الموت
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #2960
- Book Index
- 171
Grades
- -
