ஹதீஸ்கள்
#2958
ஸஹீஹ் அல்-புகாரீ - Fighting for the Cause of Allah
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (ஹுதைபியா உடன்படிக்கை கையொப்பமான ஆண்டிற்கு) அடுத்த ஆண்டு (ஒப்பந்தப்படி உம்ரா செய்யத்) திரும்பி வந்தோம். யிநாங்கள் (ஹுதைபியா ஆண்டில்) எந்த மரத்திற்குக் கீழே (நபி (ஸல்) அவர்களின் கரத்தில்) உறுதிமொழி எடுத்துக்கொண்டோமோ அந்த மரம் இது தான்’ என்று எங்களில் எந்த இருவரும் ஒருமித்த கருத்துக் கொள்ளவில்லை. அது அல்லாஹ்வின் அருளாக அமைந்தது. அறிவிப்பாளர் ஜுவைரியா பின் அஸ்மா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்து கேட்டு இதை எங்களுக்கு அறிவித்த) நாஃபிஉ (ரஹ்) அவர்களிடம் நாங்கள், ‘‘எதன்மீது நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களிடமிருந்து உறுதிமொழி பெற்றார் கள்? மரணத்தைச் சந்திக்கத் தயாராயிருப்ப தற்காகவா?” என்று கேட்டோம். அதற்கு அவர்கள், ‘‘இல்லை. ஆனால், (நிலை குலைந்துபோகாமல்) பொறுமையாக இருக்குமாறுதான் அவர்களிடமிருந்து நபி (ஸல்) அவர்கள் உறுதிமொழி வாங்கினார்கள்” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
حدثنا موسى بن اسماعيل، حدثنا جويرية، عن نافع، قال قال ابن عمر رضى الله عنهما رجعنا من العام المقبل فما اجتمع منا اثنان على الشجرة التي بايعنا تحتها، كانت رحمة من الله. فسالت نافعا على اى شىء بايعهم على الموت قال لا، بايعهم على الصبر
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #2958
- Book Index
- 169
Grades
- -
