ஹதீஸ்கள்
#2954
ஸஹீஹ் அல்-புகாரீ - Fighting for the Cause of Allah
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களை ஒரு படையில் அனுப்பி வைத்தார்கள். அப்போது எங்களிடம், ‘‘நீங்கள் இன்னாரையும் இன்னாரையும் சந்தித்தால் லிஎன்று குறைஷியரில் இருவரின் பெயர் குறிப்பிட்டுலி அவ்விரு வரையும் நெருப்பால் எரித்துவிடுங்கள்” என்று கூறினார்கள். பிறகு நாங்கள் பயணம் புறப்பட முனைந்தபோது நபி (ஸல்) அவர்களிடம் விடைபெற்றுக்கொள்ளச் சென்றோம். அப்போது அவர்கள், ‘‘நான் இன்னாரையும் இன்னாரையும் நெருப்பால் எரித்துவிடும்படி உங்களுக்குக் கட்டளையிட்டிருந்தேன். ஆனால், நெருப்பால் வேதனை செய்யும் உரிமை அல்லாஹ்வுக்கு மட்டுமே உண்டு. எனவே நீங்கள் அவ்விருவரையும் பிடித்தால் (நெருப்பால் எரிக்க வேண்டாம்;) கொன்றுவிடுங்கள்” என்று கூறினார்கள்.91 அத்தியாயம் :
وقال ابن وهب اخبرني عمرو، عن بكير، عن سليمان بن يسار، عن ابي هريرة رضى الله عنه انه قال بعثنا رسول الله صلى الله عليه وسلم في بعث، وقال لنا " ان لقيتم فلانا وفلانا ". لرجلين من قريش سماهما فحرقوهما بالنار. قال ثم اتيناه نودعه حين اردنا الخروج فقال " اني كنت امرتكم ان تحرقوا فلانا وفلانا بالنار، وان النار لا يعذب بها الا الله، فان اخذتموهما فاقتلوهما
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #2954
- Book Index
- 166
Grades
- -
