ஹதீஸ்கள்
#2952
ஸஹீஹ் அல்-புகாரீ - Fighting for the Cause of Allah
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் துல்கஅதா மாதத்தில் ஐந்து நாட்கள் எஞ்சியிருந்தபோது (துல்கஅதா பிறை 25ல்) புறப்பட்டோம். அப்போது நாங்கள் ஹஜ்ஜை மட்டுமே நிறைவேற்ற எண்ணியிருந்தோம். மக்காவை நாங்கள் நெருங்கியபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், குர்பானி பிராணியைத் தம்முடன் கொண்டுவராதவர்கள் கஅபாவை தவாஃப் செய்து ஸஃபா, மர்வாவுக்கிடையே ஓடி முடித்ததும் இஹ்ராமிலிருந்து விடுபடும்படி உத்தரவிட்டார்கள். பிறகு நஹ்ருடைய (துல்ஹிஜ்ஜா 10ஆம்) நாளில் எங்களிடம் மாட்டிறைச்சி கொண்டுவரப்பட்டது. நான், ‘‘இது என்ன?” என்று கேட்டேன். மக்கள், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தம் துணைவியரின் சார்பாக (குர்பானி பிராணியை) அறுத்துப் பலியிட்டார்கள்” என்று பதிலளித்தார் கள்.89 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. இரண்டாவது தொடரில் யஹ்யா பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறியிருப்பதாவது: நான் இந்த ஹதீஸை காசிம் பின் முஹம்மத் (ரஹ்) அவர்களிடம் சொன்னேன். அவர்கள், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த ஹதீஸை முறைப்படியே உம்ரா பின்த் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் உங்களி டம் செல்லியுள்ளார்கள்” என்றார். அத்தியாயம் :
حدثنا عبد الله بن مسلمة، عن مالك، عن يحيى بن سعيد، عن عمرة بنت عبد الرحمن، انها سمعت عايشة رضى الله عنها تقول خرجنا مع رسول الله صلى الله عليه وسلم لخمس ليال بقين من ذي القعدة، ولا نرى الا الحج، فلما دنونا من مكة امر رسول الله صلى الله عليه وسلم من لم يكن معه هدى اذا طاف بالبيت وسعى بين الصفا والمروة ان يحل. قالت عايشة فدخل علينا يوم النحر بلحم بقر فقلت ما هذا فقال نحر رسول الله صلى الله عليه وسلم عن ازواجه. قال يحيى فذكرت هذا الحديث للقاسم بن محمد فقال اتتك والله بالحديث على وجهه
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #2952
- Book Index
- 164
Grades
- -
