ஹதீஸ்கள்
#2946
ஸஹீஹ் அல்-புகாரீ - Fighting for the Cause of Allah
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை” என்று கூறுகின்ற (நிலை ஏற்படும்)வரை மக்களுடன் போர் புரியும்படி நான் கட்டளையிடப்பட்டுள் ளேன். யார் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை” என்று கூறுகிறாரோ அவர் தம் உயிரையும் உடைமையையும் என்னிடமிருந்து காப்பாற்றிக்கொள்வார்; நியாயமான காரணம் இருந்தால் தவிர. அவரது (அந்தரங்கம் குறித்த) விசாரணை அல்லாஹ்வின் பொறுப்பாகும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இதே நபிமொழியை உமர் (ரலி) அவர்களும் இப்னு உமர் (ரலி) அவர்களும் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا ابو اليمان، اخبرنا شعيب، عن الزهري، حدثنا سعيد بن المسيب، ان ابا هريرة رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم " امرت ان اقاتل الناس حتى يقولوا لا اله الا الله. فمن قال لا اله الا الله، فقد عصم مني نفسه وماله، الا بحقه، وحسابه على الله ". رواه عمر وابن عمر عن النبي صلى الله عليه وسلم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #2946
- Book Index
- 158
Grades
- -
